திருச்சி மாவட்டத்திற்கான கோரிக்கைகள்

0
1

 திருச்சிராப்பள்ளி சமூக நலக் கூட்டமைப்பு

Helios

திருச்சி மாவட்டத்திற்கான கோரிக்கைகளை

வேட்பாளர்களின் முன் வைக்கிறது.

 

2
 1. திருச்சி மாநகரில் அனைத்து வசதிகளுடன் ஒரு மையமான இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
 2. திருச்சி காந்தி சந்தையின் மொத்த வணிகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதன் மூலமும், சில்லறை வணிக சந்தைகளை பல்வேறு முக்கிய இடங்களில் அமைப்பதன் மூலமும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்.
 3. திருச்சி ரயில்வே சந்திப்பில் இருந்து சென்னை, சேலம், பெங்களுரு ஆகிய ஊர்களுக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும். திருச்சியிலிருந்து காலை 9.30 க்கு புறப்படும் கரூர் பயணிகள் ரயிலில் நிரந்தரமாக சேலம் வரை நீடிக்க வேண்டும். முத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மேல்நிலைப் படிக்கட்டு அமைக்க வேண்டும். திருச்சி – பெரம்பலூர் – அரியலூர் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
 4. கரூர் நெடுஞ்சாலையையும் – வண்ணத்துப் பூச்சி பூங்காவையும் இணைக்கும் வகையில் காவிரியில் கதவணை அமைத்து, நீரை சேமிக்க வேண்டும். முக்கொம்பில் உடைந்த அணையை தரமாக புதிதாக விரைந்து அமைக்க வேண்டும். அனைத்து வாய்க்கால்கள் மற்றும் நீராதாரங்களை விரைந்து சீர்படுத்தவேண்டும்.
 5. குடிமுருட்டி பாலத்தை புதிதாகக் கட்டுவதுடன், கரூர் சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தி அமைக்க வேண்டும்.
 6. பல வருடங்களாக நிலுவையில் உள்ள துவாக்குடி முதல் அந்தநல்லுர் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்.
 7. தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சியை இரண்டாகப் பிரித்து சுமார் 6000 மக்கள் தொகை உள்ள நெசவாளர் மக்களின் பாரம்பரிய ஊரான கோடியம்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும்.
 8. திருவரங்கம் வட்டத்தை இரண்டாகப் பிரித்து பெட்டவாய்த்தலையை தலைமையிடமாகக் கொண்டு தனிவட்டம் (Taluk) அமைக்க வேண்டும்.
 9. திருவெறும்பூரில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.
 10. BHEL, ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் தொழிலகங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அனைத்து தொழில்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 11. பல வருடங்களாக நிலுவையில் உள்ள திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
 12. விமானநிலையம், மன்னார்புரம் மேம்பாலம் ஆகிய பணிகளுக்கு தேவையான இராணுவ நிலத்தை விரைந்து பெற்றுத் தரவேண்டும்.
 13. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை விரிவுப்படுத்தி வாழை ஆராய்ச்சியில் பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளை ஏற்படுத்த வேண்டும். நேந்திரம் வாழைக்காயில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.
 14. தேசிய தொழில் நுட்பக்கழகம் (NIT) மத்திய சட்டக்கல்லூரி முதலிய மத்திய அரசின் கல்வி நிலையங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

தேசிய மாநில அளவிலான கோரிக்கைகள் 

 1. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
 2. GST வரிவிதிப்பை ரத்து செய்து மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
 3. கல்வியை மீண்டும் இந்திய அரசியல் அமைப்பின் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.
 4. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
 5. மீத்தேன், நியூட்ரினோ முதலிய திட்டங்களை கைவிட வேண்டும்.
 6. சென்னையில் உச்ச நீதி மன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும்.
 7. உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
 8. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக தரம் உயர்த்த வேண்டும்.
 9. மத்திய அரசின் அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி அலுவல் மொழியாக இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே பணிநியமனம் செய்ய வேண்டும்.
 10. பெட்ரோலிய விலை நிர்ணயித்தை அரசே செய்ய வேண்டும். மேலும் பெட்ரோலுக்கான விற்பனை வரிக்கு ஒரு எல்லை நிர்ணயிக்க வேண்டும்.
 11. மாநிலங்களின் உரிமைகளையும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளையும் மைய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
 12. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை – வழங்க வேண்டும்.
 13. சிரிமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 –ன் படி இலங்கையில் இருந்து இந்தியக் குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பியவர்களுக்கு உரிய மறுவாழ்வுத் திட்டங்களை மீண்டும் வழங்க வேண்டும்.
 14. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.