திருச்சி நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு முகாம்.

0
1

திருச்சி நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு முகாம்.

  திருச்சியில் ஏப்.8 நடக்க உள்ள சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 14ம் ஆண்டு நிறைவையொட்டி விழிப்புணர்வு முகாம் நாளை (9ம் தேதி) நடக்கிறது. இதில் பொதுமக்களிடையே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்தில் தீர்ப்பது குறித்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

2

இதில் மாவட்ட நீதிபதி, கலெக்டர், காவல்ஆணையர், எஸ்பி, வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ர் கலந்து கொண்டு பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதுதவிர சமரச தீர்வு மையத்தின் அமைப்பு, அதன் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர். எனவே இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது தவிர 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர் துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.