திருச்சி தேசியக்கல்லூரியின் நூலகவிழா

0
1

திருச்சி தேசியக்கல்லூரியின் நூலகநாள் விழா கடந்த 4ம் தேதி கொண்டாப்பட்டது.  முன்னாள் முனைவர். இராகவன் வரவேற்றார். நிகழ்விற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் சு.சுந்தரராமன்  புதிய நூலகக் கட்டிடத்தில் உள்ள வசதிகளை விளக்கினார். அதை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்தும்படிக் கூறினார்.  பழைய நூலகக் கட்டிடத்திலிருந்து புதிய நூலகக் கட்டிடத்திற்கு சுமார் 1,16,000 (ஒரு லட்சத்து பதினாறாயிரம்) நூல்களைப் பாதுகாப்பாகவும் மிக விரைவாகவும் புதிய கட்டிடத்திற்கு மாற்றியதற்காக நூலகரையும், அவருக்கு உதவி புரிந்த நூலக அலுவலர்களையும் பாராட்டினார்.

“நூலகமும் அறிவு மேம்பாடும்” என்ற தலைப்பில் நூலகநாள் விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர். நந்தகோபாலன்  சிறப்புரையாற்றினார். கல்வியும் கல்வியறிவும் தமிழ்ச் சமூகத்தால் தோற்ற காலத்திலிருந்தே பெரிதும் மதித்துக் போற்றப்பட்டுள்ளன. தமிழ்ச் சான்றோர்களாகிய திருவள்ளுவர், கம்பர், ஒளவையார் முதலியோர் அறிவற்றவர்களை, கல்லாதவர்களை மூடர்களாகச் சித்திரித்துள்ளனர்.

‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றார் ஒளவையார். கல்வியறிவைப் பெருக்குவதில் நூலகங்கள் அறிவுத் திருக்கோயில்களாகச் செயல்படுகின்றன. நூல்கள் கல்வி அறிவை மட்டும் தராமல் மன அமைதி, மகிழ்ச்சி, மனநிறைவு, வளம் ஆகிய அனைத்தையும் பெறுவதற்கு உறுதுணைபுரிகின்றன. நூலகத்திலுள்ள நூல்கள் வழி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரையுடன் உரையை நிறைவு செய்தார்.

2

மிக அதிக அளவில் நூலகத்தை பயன்படுத்திய 30 மாணவர்களுக்கு செயலர் ரகுநாதன்  பாராட்டி பரிசளித்தார்.  நிகழ்வில் பல்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நிறைவாகத் நூலகர் முனைவர். சுரேஷ்குமார்   நன்றி கூறியதுடன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகக் கட்டிடம் கட்டித் தந்த  நிர்வாகத்தையும் அதை நன்றாகப் பயன்படுத்தி பரிசு பெற்ற மாணவச் செல்வங்களையும் பாராட்டினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.