திருச்சி எம்.பி. தொகுதி திமுக வேட்பாளர் திருநாவுக்கரசின் பலம் – பலவீனம் !

0
1

திமுக தலைமையிலான கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசு கை சின்னத்தில் போட்டியிடுகின்றார். திருநாவுக்கரசு மூத்த அரசியல்வாதி. திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகள் பலம், அத்தோடு திருச்சியில் உள்ள கிருஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் பெரிய பலம் சேர்ப்பவையாக இருக்கும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த போது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் பரவலாக வரக்கூடிய தகவல்கள். ஏழு கட்சியின் வேட்பாளராக ஏழு சின்னத்தில் நின்றது. மாவட்ட செயலாளரின் சுறுசுறுப்புக்கு ஈடு கொடுக்க முடியாதது. நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசும் போது வேட்பாளர் தூங்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் பலவீனமாக கருதப்படுகிறது.

2

கூட்டணி கட்சியினருக்கு அறிமுக கூட்டம், மாநகரம் ,பகுதி, வட்டக் கழகம் , ஒன்றியம் பேரூராட்சி என்று தேர்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்குவது. முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. வாக்கு சேகரிப்பில் வேகத்தை கூட்டாதது உட்பட பல்வேறு விஷயங்கள் சவாலாக அமைந்துள்ளது.

4

திருநாவுக்கரசர் நேரம் மேலாண்மையும், படுத்துக்கொண்டே ஜெயித்துவிடுவேன் என்பதும், 7 சின்னத்தில் போட்டியிட்டவன், கடைசி 5 நாளில் எல்லாம் பண்ணிடலாம், என்பது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கண்டிப்பாக நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்கிற அசட்டு தைரியம் இவை எல்லாம் இவருக்கு பெரிய மைனஸ்.

திமுக கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கு ரொம்ப அசலாட்டாக நேரம் கடந்து சென்று வருவது திமுகவினர் இடையே பெரிய அயர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

அதிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தேனி என்று தன்னுடைய தலைவர்கள் போட்டியிடும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்க சென்றதால் இங்கே காங்கிரஸ் கட்சி என்றால் திருநாவுக்கரசருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே அந்த பெமினா ஓட்டலை சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆக திருநாவுக்கரசருக்காக தி.மு.க கட்சியினர் மட்டுமே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மாயமாக மறைந்த நிலையில் இருக்கிறார்கள்.

 

3

Leave A Reply

Your email address will not be published.