திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனின் பலம் மற்றும் பலவீனம்

0
D1

17வது நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரின் பலம் பலவீனம்  என்ன என்பதை நம்ம திருச்சி கள ஆய்வு செய்துள்ளது

அதிமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கட்டாயப்படுத்தி சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் திருச்சியில் போட்டியிட ஆள் கிடைக்காமல் தடுமாற கடைசியில்   தர்மபுரியை சேர்ந்த மருத்துவர் மருத்துவர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன்

D2

அஇஅதிமுக ,பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , அகில இந்திய என் ஆர் காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணியாக இருப்பது பலமாக கருதப்படுகிறது.

இக்கூட்டணி ஆனது ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியின் கணக்கு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை பலமாக கருதப்படுகிறது. .

N2

அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக உள்ள இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியினர் தலைமையாக ஏற்பதில் உள்ள சிக்கல். கட்சி பிளவுபட்டது. ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் திட்டியவர்களுடன் கூட்டணி ,சமாதி வைக்க இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி என பல்வேறு விஷயங்களில் முரண்பட்ட கூட்டணி.

திருச்சி அதிமுகவில் மாவட்ட செயலாளர் பா.குமாருக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. மா.செ. குமார் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த மண்டபம் பிடித்தும் விடாப்பிடியாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூட்டம் வேண்டாம் என்று மறுத்ததும் ஆளும் கட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒரு செயல்வீரர்கள் கூட்டம் இது வரை நடத்தாமல் இருப்பதே  பெரிய மைனஸ்.

இது வெளியூர் வேட்பாளர். வாக்கு சேகரிப்பின் போது பொது மக்கள் உள்ளூர் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. சொந்தக் கட்சிக்கும் பிற கட்சிக்கும் வேலை செய்வதில் உள்ள சுணக்கம் உள்ளிட்டவை பலவீனமாகும்.

இந்த கூட்டணியில் ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அ.தி.மு.க. இந்த முறை போட்டியிடாதது பெரிய மைனஸ்.ஒருவேலை அதிமுக போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக ஜெயித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் வேட்பு மனு தாக்கல் செய்த போது , நிர்வாகிகள் கூட்டம் நடத்திய போது, மாநகர ,பகுதி ,வட்டக் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிக்காக நிதி ஒதுக்கியது. சொந்த கட்சியினர் பிற கட்சியினர் ஒருங்கிணைந்து வாக்கு சேகரிப்பது, மக்களிடையே உள்ள எதிர்ப்பு நிலை உள்ளிட்டவை சவாலானதாக உள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.