திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி

0
1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12314 நபர்களுக்கு வாக்குப்பதிவு அலுவலருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைப்பெற்றது. இதில் 5356 வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை அளித்துள்ளனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர், காட்டூர் மாண்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது.

2
4

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியில் பங்கேற்றவர்கள், மணப்பாறை லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1529 அலுவலர்களுக்கும், ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1618 அலுவலர்களுக்கும், திருச்சிராப்பள்ளி புதூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 1312 அலுவலர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மதுரை ரோடு ஹோலி கிராஸ் கல்லூரியில் 1266 அலுவலர்களுக்கும், திருவெறும்பூர் காட்டூர் மாண்போர்டு மேல்நிலைப்பள்ளியில் 1412 அலுவலர்களுக்கும் இலால்குடி நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1174 அலுவலர்களுக்கும் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1283 அலுவலர்களுக்கும் தொட்டியம் ஏலூர்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரியிலும் 1197 அலுவலர்களுக்கும் துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1265 அலுவலர்களுக்கும் ஆக மொத்தம் 12056 அலுவலர்கள் பயிற்சியில் பங்குபெற்றனர். இவர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி  அளிக்கப்பட்டது.  இதில் பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதில் மணப்பாறை தொகுதியில் 619 அலுவலர்களும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 820 நபர்களும், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் 613 அலுவலர்களும், திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் 564 அலுவலர்களும், திருவெறும்பூர் தொகுதியில் 425 அலுவலர்களும், இலால்குடி தொகுதியில் 628 அலுவலர்களும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 521 அலுவலர்களும், முசிறி தொகுதியில் 577 அலுவலர்களும், துறையூர் தொகுதியில் 589 நபர்களும் ஆக மொத்தம் 5356 அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை அளித்தனர்.

தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர் -1, வாக்குப்பதிவு நிலை அலுவலர் -2, வாக்குப்பதிவு நிலை அலுவலர் -3 மற்றும் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு நிலை அலுவலர்-4 ஆகியோருக்கு வாக்குப்பதிவு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT-Voters Verifiable Paper Audit Trail) இயந்திரத்தினை எவ்வாறு பயன்படுத்துவது, வாக்காளர் பட்டியிலில் வாக்காளர்களை கண்டறிந்து உரிய ஆவணங்களை எவ்வாறு சரிப்பார்ப்பது, மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தயார் செய்து ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் குறித்தும் பயிற்சியானது நவீன முறையில் கணினி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளியுடன் கூடிய காணொளி மூலம் அளிக்கப்பட்டது என திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.