திருச்சி எம்.பி. தொகுதி வேட்பாளர்களின் பலம் – பலவீனம் !

0
1

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் களின் பலம் பலவீனம் சவால்கள்

17வது நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் பலம் பலவீனம் சவால்கள் என்ன என்பதை நம்ம திருச்சி கள ஆய்வு செய்துள்ளது

அதிமுக கூட்டணி

2

அதிமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கட்டாயப்படுத்தி சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் திருச்சியில் போட்டியிட ஆள் கிடைக்காமல் தடுமாற கடைசியில்   தர்மபுரியை சேர்ந்த மருத்துவர் மருத்துவர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன்

அஇஅதிமுக ,பாஜக, பாமக ,தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , அகில இந்திய என் ஆர் காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணியாக இருப்பது பலமாக கருதப்படுகிறது.

இக்கூட்டணி ஆனது ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியின் கணக்கு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை பலமாக கருதப்படுகிறது. .

அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக உள்ள இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியினர் தலைமையாக ஏற்பதில் உள்ள சிக்கல். கட்சி பிளவுபட்டது. ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் திட்டியவர்களுடன் கூட்டணி ,சமாதி வைக்க இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி என பல்வேறு விஷயங்களில் முரண்பட்ட கூட்டணி.

திருச்சி அதிமுகவில் மாவட்ட செயலாளர் பா.குமாருக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. மா.செ. குமார் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த மண்டபம் பிடித்தும் விடாபிடியாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூட்டம் வேண்டாம் என்று மறுத்ததும் ஆளும் கட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒரு செயல்வீரர்கள் கூட்டம் இது வரை நடத்தாமல் இருப்பதே  பெரிய மைனஸ்.

இது வெளியூர் வேட்பாளர். வாக்கு சேகரிப்பின் போது பொது மக்கள் உள்ளூர் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. சொந்தக் கட்சிக்கும் பிற கட்சிக்கும் வேலை செய்வதில் உள்ள சுணக்கம் உள்ளிட்டவை பலவீனமாகும்.

இந்த கூட்டணியில் ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அ.தி.மு.க. இந்த முறை போட்டியிடாதது பெரிய மைனஸ்.ஒருவேலை அதிமுக இந்த போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக ஜெயித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் வேட்பு மனு தாக்கல் செய்த போது ,நிர்வாகிகள் கூட்டம் நடத்திய போது, மாநகர ,பகுதி ,வட்டக் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிக்காக நிதி ஒதுக்கியது. சொந்த கட்சியினர் பிற கட்சியினர் ஒருங்கிணைந்து வாக்கு சேகரிப்பது, மக்களிடையே உள்ள எதிர்ப்பு நிலை உள்ளிட்டவை சவாலானதாக உள்ளது.

திமுக கூட்டணி

திமுக தலைமையிலான கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசு கை சின்னத்தில் போட்டியிடுகின்றார். திருநாவுக்கரசு மூத்த அரசியல்வாதி. திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகள் பலம், அத்தோடு திருச்சியில் உள்ள கிருஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் பெரிய பலம் சேர்ப்பவையாக இருக்கும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த போது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் பரவலாக வரக்கூடிய தகவல்கள். ஏழு கட்சியின் வேட்பாளராக ஏழு சின்னத்தில் நின்றது. மாவட்ட செயலாளரின் சுறுசுறுப்புக்கு ஈடு கொடுக்க முடியாதது. நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசும் போது வேட்பாளர் தூங்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் பலவீனமாக கருதப்படுகிறது.

கூட்டணி கட்சியினருக்கு அறிமுக கூட்டம், மாநகரம் ,பகுதி, வட்டக் கழகம் ,ஒன்றியம் பேரூராட்சி என்று தேர்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்குவது. முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. வாக்கு சேகரிப்பில் வேகத்தை கூட்டாதது உட்பட பல்வேறு விஷயங்கள் சவாலாக அமைந்துள்ளது.

திருநாவுக்கரசர் நேரம் மேலாண்மையும், படுத்துக்கொண்டே ஜெயித்துவிடுவேன் என்பதும், 7 சின்னத்தில் போட்டியிட்டவன், கடைசி 5 நாளில் எல்லாம் பண்ணிடலாம், என்பது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கண்டிப்பாக நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்கிற அசட்டு தைரியம் இவை எல்லாம் இவருக்கு பெரிய மைனஸ்.

திமுக கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கு ரொம்ப அசலாட்டாக நேரம் கடந்து சென்று வருவது திமுகவினர் இடையே பெரிய அயர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

அதிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தேனி என்று தன்னுடைய தலைவர்கள் போட்டியிடும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்க சென்றதால் இங்கே காங்கிரஸ் கட்சி என்றால் திருநாவுக்கரசருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே அந்த பெமினா ஓட்டலை சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆக திருநாவுக்கரசருக்காக தி.மு.க கட்சியினர் மட்டுமே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மாயமாக மறைந்த நிலையில் இருக்கிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணி 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே  நாட்டிலேயே முதன்முறையாக சுயேச்சை வேட்பாளர்களுக்கு பொது சின்னம் பெற்றது, ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு எதிராக ஆர்கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போன்ற தலைமைப் பண்பு மிக்க ஆளுமையாக இருப்பதால் மக்களிடம் வரவேற்பு உள்ளது.

சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை திருச்சி மேயராக இருந்தது. மண்ணின் மகள். ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்ற அடையாளமும் திருச்சி – புதுக்கோட்டை மக்களுக்கு பரிச்சையமானவர் என்பது sdpi சிறுபான்மை மக்களின் ஆதரவு பலமாக கருதப்படுகிறது.

சின்னம் அறிவிப்பதற்கு முன்னதாகவே களத்தில் கலக்கினார்கள். தற்போது சின்னத்தை கொண்டு போய் சேர்ப்பது ரொம்ப அவ்வளவு எளிது இல்லை. பிரச்சாரத்திற்கு போகிற இடத்தில் எல்லாம் இரட்டை இலையில் ஓட்டு போடுகிறோம் என்று கிராம மக்கள் சொல்வது  இவர்களுக்கான மைனஸ் ஆனாலும் இந்த தேர்தலில் அ.திமுக. இரட்டை இலை சின்னம் களத்தில் இல்லாமல் இருப்பது இவர்களுக்கு மிகப்பெரிய பலம்.

இரண்டு முறை தோல்வி கொடுத்த அனுபவத்தில் தற்போது கட்சியினரிடையே பழகுவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் கட்சியினர்  உள்ள இடைவெளி  குறைந்து இருக்கிறது. ஆனாலும் பல்வேறு நிர்வாகிகள் இருக்கும் பொழுது வேட்பாளரின் அணுகுமுறை பாணி. பலமான கூட்டணியுடன் மோதும் போது தனித்து செயல்படுவது பலவீனமாகவும் பலமாகவும் கருதப்படுகிறது.

பிரச்சாரத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் எந்த கட்சியும் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே ஆரம்பத்தில் திருச்சி மாநகருக்குள் வேட்பாளரை அழைத்து கொண்டு போய் சேர்த்த விதம் தான் தற்போது கருத்துகணிப்புகளில் வெற்றிபெறுவார் என்று பேசுகிற அளவிற்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இந்த டெம்போ குறைக்காமல் சென்றால் அவர்கள் நினைத்த இடத்தை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு  மாவட்ட செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், ஆர்.மனோகர், பரணி கார்த்தி ஆகியோரின் பலம் பொருந்திய உழைப்பும், கட்சியினர் இடையே உள்ள செல்வாக்கும் வேட்பாளர் சாருபாலவுக்கு பெரிய பலமாக இருக்கிறது.

தேர்தல் பணிக்காக அறிமுகக் கூட்டம் மாநகர, பகுதி, வட்டக் கழக ,ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளுக்காக நிதி ஒதுக்குவது புதிய சின்னமான பரிசு பெட்டகத்தை வாக்காளர் இடையே கொண்டு சேர்ப்பது கட்சியினர் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தாமல் இருப்பது சவாலானதாக கருதப்படுகிறது.

மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆனந்தராஜா டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் அடிப்படையில் இந்த கட்சியில் உறுப்பினர் கிடையாது. திருச்சியில் உள்ள தொழில்அதிபர் . கட்சிக்கு வெளியில் உள்ளவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தெரிவிக்கலாம் என்று கமல்  கொடுத்த அறிவிப்பின் அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி கட்சிக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும். ஏற்கனவே திருச்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட அனுபவமும்,  கமல் என்ற ஒற்றை அடையாளமே வாக்கு வங்கிக்கான ஆதாரமாக உள்ளது கட்சி கட்டமைப்பு வாக்கு சேகரிப்பு உள்ளிட்டவை வேட்பாளரால் கொண்டு போவது சவாலானதாக உள்ளது.

நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வினோத் உழவர் சின்னத்தில் போட்டியிடுகின்றார் அவர்களுக்கே உள்ள பாணியில் கட்சியின் நிலைப்பாடுகளை எடுத்து வைக்கின்றார்கள் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு சேகரிப்பு கட்டமைப்பு இல்லாதது போன்றவை சவாலானதாக உள்ளது.

 

கள நிலவரப்படி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் பணியாற்றுபவர்களே வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உள்ளது வலுவான தலைவர்கள் இல்லாத நிலையில் கூட்டணியை நம்பி நிற்கக்கூடிய சூழலில் மாபெரும் இரண்டு திராவிட கட்சிகள் உள்ளது அதே நேரத்தில் தனியாக போட்டியிடக்கூடிய அமமுக கட்சியினர் செயல்பாடும் மக்களிடையே மாற்றத்தை கொண்டு வந்துள்ளது வரக்கூடிய நாட்கள் அனல் பறக்க கூடியதாக அரசியலில் மாற்றத்தை உண்டு பண்ண கூடியதாக அமையும் என்பதே களத்தின் நிலவரமாக அமைந்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.