ஆண் வேடமிட்டு ஏமாற்றிய பெண்!

0
1 full

ஆண் வேடமிட்டு ஏமாற்றிய பெண்!

16 வயதான இந்த சிறுமி, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது விஷ்ணுபாலா என்பவரைச் சந்தித்துள்ளார். தொடர்ந்து, அவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். சில நாட்கள் கழித்து, அந்த சிறுமியைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் விஷ்ணுபாலா. அந்த சிறுமியும் காதலை ஏற்க, இருவரும் தங்களது காதலைத் தொடர்ந்துள்ளனர். சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாதபோது, விஷ்ணுபாலா அங்கு சென்று வந்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்னர், திடீரென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் காணாமல்போனதால் சிறுமி கவிதாவிடம் கேள்வி எழுப்பினர் அவரது பெற்றோர். அப்போதுதான், அவர் விஷ்ணுபாலாவுடன் பழகுவது தெரிய வந்திருக்கிறது. சிறுமியிடம் பழகுபவர் யார் என்று கண்டுபிடிக்க, அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பலன் ஏதும் கிட்டவில்லை. இந்த நிலையில், மீண்டும் வீட்டிலிருந்த 3 பவுன் நகைகள் காணாமல் போனதைக் கண்டு கவிதாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரிடம் இதுபற்றிப் புகார் தெரிவித்தனர்.

அதன்பின்னர், கவிதாவை விஷ்ணுபாலாவுடன் செல்போனில் பேசவைத்து அவரை வரவழைத்தனர் போலீசார். வீட்டுக்குள் நுழைந்த விஷ்ணுபாலாவைக் கைது செய்தனர். அப்போதுதான், காங்கேயத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் ஆண் வேடமிட்டு விஷ்ணுபாலா என்ற பெயரில் சிறுமியை ஏமாற்றியது தெரிய வந்தது. இவரிடம் இருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், சரோஜா பெண்கள் மீது ஈர்ப்பு கொண்டவர் என்றும், விவரம் ஏதுமறியாத சிறுமிகளை ஆண் வேடத்தில் காதலிப்பதாக நடித்து ஏமாற்றினார் என்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு அருகே கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சிறுமியிடம் ஆண் வேடமிட்டு ஏமாற்றிய பெண்!

3 half

Leave A Reply

Your email address will not be published.