தேர்தலில் மூன்றாம் பாலினத்தனர் யார் பக்கம் !

0
Business trichy

 தேர்தலில் மூன்றாம் பாலினத்தனர் யார் பக்கம்

மூன்றாம் பாலின வாக்காளர்கள் யார் பக்கம்

 

 

பதினேழாவது மக்களவை தேர்தலை ஒட்டி அனல் பறக்கும் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளனர். தேர்தல் களத்தில் மூன்றாம் பாலினத்தவர்களின் நிலை என்ன என்ற நிலையில் சேப் திருநங்கை அறக்கட்டளை கஜோலிடம் பேசுகையில், உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகாரம் அளித்தது. அதன் காரணமாக அனைத்து ஆவணங்களிலும் இதர பிரிவினர் மற்றவர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைய பட்டியலிலும் அடையாளப் படுத்தியுள்ளனர்.

Half page

2010 ஆம் ஆண்டு முதல் இதர பிரிவினர் வகையிலேயே நான் வாக்களித்து வந்துள்ளேன் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அமுல்படுத்தப்பட்டு அனைத்து ஆவணங்களிலும் இதர பிரிவினர் மற்றவர் என்று குறிப்பிட்ட பிரிவில் நாங்கள்  வாக்கு அளிக்க உள்ளோம். அரசியல் இயக்கங்கள் இந்திய குடிமக்களாகிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ள  நிலையில் எங்களுக்கு வாக்குரிமை அளித்து உள்ளார்கள் அதேபோல அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 

அப்போதுதான் திருநங்கைகளும் சீரான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்றார்.அரசியல் கட்சிகளில் தினகரன் மூன்றாம் அணி என்றும், காங்கிரஸில் அப்சரா ரெட்டி திருநங்கைக்கு மாநில அளவிலும் பொறுப்புகள் கொடுத்துள்ளது திருநங்கையினரை அங்கீகரிப்பதாக உள்ளது .மேலும் அனைத்து துறைகளிலும் திருநங்கையர்களுக்கு வருங்காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கி திருநங்கைகளுக்கும் பிறருக்கு வழங்குவது போல் அனைத்து உரிமைகளையும்  பெற்றுத்தர வேண்டும் என்றார்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.