திருச்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் அபேஸ்.

0

திருச்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் அபேஸ்.

லால்குடி போஸ்ட் ஆபீஸ் பெண் ஊழியர் ஹெலினாவிடம் 7பவுன் தாலி செயின் பறிப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்த ஹெலினா ( 46) லால்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வரும் போது பல்லபுரம் என்ற கிராமத்தின் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த மர்ம நபர்கள் ஹெலினாவை தாக்கி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் கையில் முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்து ஹெலினா லால்குடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்கு திருச்சி அட்லஸ் மருத்துவமனை க்கு சென்றுள்ளார். இது தொடர்பாக லால்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.