
திருச்சியில் மகளிர் விடுதியில் செல்போன் திருட்டு.

திருச்சி புத்தூரில் ஹோலி கிராஸ் பெத்தனை ஹாஸ்டல் எனும் மகளிர் விடுதி நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவிகள் பலர் தங்கி வருகின்றனர், கடந்த ஏப்ரல் 3 தேதி ஜோன்ஸ் மனிஷா என்னும் மாணவி தனது அறைக்குள் செல்போனை ஜார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் அறைக்கு வந்து செல் போனை பார்க்கையில் செல்போன் வைத்திருந்த இடத்தில் இல்லை, பதட்டமடைந்த மாணவி தனது ஹாஸ்டல் வார்டானிடம் புகார் தெரிவித்துள்ளார். ஹாஸ்டல் வார்டன் மாணவிகள் எல்லோரிடமும் விசாரித்துவிட்டு யாரும் எடுக்கவில்லை என்று தெரிந்த பின்பு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்,
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த GH -பகுதி காவல் துறையினர் மாணவிகளிடம் விசாரித்து விட்டு ஹாஸ்டலில் உள்ள கேமராவை ஆராய்ந்ததில் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் சுவர் ஏறிக்குதித்து ஹாஸ்டலுக்குள் வந்து செல்போன் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் அந்நபர் மீது வலை வீசியதில் அந்நபர் சிக்கிக்கொண்டான், மேலும் அந்நபரை விசாரிக்கையில் தென்னுர் சவுதியார் கோவில் தெருவை சேர்ந்த பெர்க்மான்ஸ்(வயது-47) என்பதும்,மேலும் அந்நபர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது, அதன்பேரில் போலீசார் அந்நபர் மீது வழக்குப் பதிந்து காவலில் வைத்தனர்.
