திருச்சியில் போலீசாரின் தபால் ஓட்டு படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பு.

0
Business trichy

திருச்சியில் போலீசாரின் தபால் ஓட்டு படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பு.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை கவர முயற்சிப்பதையும் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுவார்கள். தபால் ஓட்டு அளிக்க விருப்பம் உள்ள போலீசாருக்கு தேர்தல் விதிமுறைப்படி படிவம்-12 என்ற படிவம் வழங்கப்படுகிறது.

web designer

அந்த வகையில் திருச்சி மாநகரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டு அளிப்பதற்கு வசதியாக அதற்கான படிவம் வழங்கப்பட்டது. இந்த படிவத்தில் தொகுதி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரிசை எண், பிரிவு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுச்சீட்டை அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். இந்த படிவங்களை போலீசார் பூர்த்தி செய்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

loan point

இதைத்தொடர்ந்து போலீசாருக்கான தபால் ஓட்டு படிவங்களை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “திருச்சி மாநகரில் போலீசார், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 2,300 பேர் தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். இதனை தேர்தல் பிரிவு அதிகாரிகள் சரிபார்த்து ஓட்டளிப்பதற்கான படிவத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பின் அதனை வைத்து போலீசார், தபால் ஓட்டுக்களை பதிவு செய்வார்கள்” என்றனர். போலீசார் தபால் ஓட்டினை பதிவு செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.