இந்திய அழகி திருச்சி அனுகீர்த்தி தமிழ் சினிமாவில் நடிக்கிறார் !

0
1

இந்திய அழகி பட்டம் பெற்ற இளம் பெண் அனுகீர்த்தி வாஸ் நடிகர் பிராந்த் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

‘ஜானி’ படத்துக்குப் பின் நடிகர் பிரசாந்த் அவரின் அப்பா தியாகராஜன் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபோக்குப் படமாக இருக்கப்போகும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்க உள்ளார். ‘சாக்லேட்’ படத்துக்குப் பின் இந்தப் படத்தின் மூலம் பிரசாந்த்தை மீண்டும் இயக்குகிறார் வெங்கடேஷ்.

‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், `காதல் கவிதை’ படத்தில் இஷா கோபிக்கர், `பொன்னர் சங்கர்’ படத்தில் பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன் என உலக அழகிகளுடனும் இந்திய அழகிகளுடனும் நடித்துவரும் பிரசாந்த் மீண்டும் அப்படி ஒருவருடன் டூயட் பாட உள்ளார்.

 

2

இந்தப் படத்தில் கடந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் பிராந்த் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த்துக்கு அக்காவாக நடிகை பூமிகா நடிக்கப்போகிறாராம்.

 

இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 

பாடல்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் எடுக்கப்போகிறார்களாம்.

3

Leave A Reply

Your email address will not be published.