திருச்சி பியூட்டிபார்லர் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.

0
Business trichy

திருச்சி பியூட்டிபார்லர் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.

திருச்சியை சேர்ந்த அழகுநிலைய உரிமையாளரை ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய மதுரையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதுடன் அவரது மனைவி மற்றும் மகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி முருகன் நகரை சேர்ந்தவர் குழந்தைராஜ் இவரது மகன் கெவின்(வயது 46). இவர் விருதுநகரில் ஒரு புட்டி பார்லர் திறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்கான பணத்தை பல்வேறு இடங்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டுவந்துள்ளார்.

loan point
web designer

இந்நிலையில் மதுரையை சேர்ந்த லாண்டரி கடை உரிமையாளர் துரைராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரின் மூலம் தனது ஆசையை துறை ராஜிடம் தெரிவித்துள்ளார்.உடனே துரைராஜ் கெவினுக்கு ரூ. 32 லட்சம் கொடுத்துள்ளாராம்.

nammalvar

பணத்தை பெற்றுக்கொண்ட கெவின் தான் நினைத்தது போல் விருது நகரில் பியூட்டி பார்லர் திறந்துள்ளார். அதனை நல்ல வகையிலும் நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ் அவரது 2 மனைவிகள் மற்றும் மகள் ஆகியோர் கெவினிடம் சென்று வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து இதுவரை ரூ.1 கோடியே 5 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதுவரை நான் ரூ.67 லட்சம் கொடுத்து விட்டதாக கெவின் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட துரைராஜ் அவரது மனைவிகள் மற்றும் மகள் ஆகியோர் கெவினிடம் பணத்தை கேட்டு தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கெவின் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து துரைராஜை கைது செய்து அவரின் மனைவிகள் மற்றும் மக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.