திருச்சியில் வளர்ந்து வரும் இளம் வழிப்பறி கும்பல்கள்.

0
Full Page

திருச்சியில் வளர்ந்து வரும் இளம் வழிப்பறி கும்பல்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரகுநாத ஹோட்டலின் முன் பழக்கடை வைத்திருப்பவர் தென்னுர் ஸ்டீல் தோப்பை சேர்ந்த சையது முஸ்தபா(வயது 47), அவர் 03-04-19 நேற்று காலை வழக்கம் போல கடையை நடத்தி வந்தார். அப்போது கடைக்கு வந்த தல தமீம் என்கின்ற முஹமது தமீம்(வயது 32) மற்றும் புஜ்ஜி என்கின்ற இம்ரான் (வயது 24) ஆகியோர் குடிக்க பணம் கேட்டுள்ளனர், கடை உரிமையாளரான சையது முஸ்தபா பணம் தர மறுத்ததால் இருவரும் கடையை சேதப்படுத்தியதுடன் கத்தியை காட்டி அவரிடமிருந்து ரூ.1000 மிரட்டி வாங்கி சென்றனர்.

Half page

இது தொடர்பாக சையது முஸ்தபா கோட்டை காவல் நிலையத்தில் முஹமது தமீம் மற்றும் இம்ரான் மீது புகார் கொடுத்தார். அதன் மூலம் கோட்டை காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் முஹம்மது தமீம், மற்றும் இம்ரான் ஆகியோர் சென்னை பைபாஸ் ஓயாமாரி அருகே நின்று கொண்டிருந்த போது போலீசார் வளைத்து பிடித்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து பட்டை கத்தி மற்றும் 26,000 ரூபாய் பணமும் கைப்பற்றினர், மேலும்
அவ்விருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 29-03-19 அன்று இரவு திருச்சி ஜாபர் பாட்சா தெருவில் உள்ள சூரியா பைனாஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ரெங்கநாதன் என்பவற்றின் நிதி நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து ரூ.25,000 திருடியது தெரியவந்தது.

இதன்மூலம் போலீசார் அவர்களிடமிருந்து 26,000 பணத்தை மீட்டதுடன் இருவரையும் கைது செய்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.