திருச்சியில் பட்டி தொட்டி எல்லாம் பரிசுப் பெட்டகம் தான் ட்ரெண்டிங்..,

0
Business trichy

பட்டி தொட்டி எல்லாம் பரிசுப் பெட்டகம் தான் ட்ரெண்டிங்..,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காந்தி சந்தையில் மகளிர் அணியினர் செண்டை மேளம் முழங்க பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர். கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். 

 காந்தி சந்தையில் பிரச்சாரம் முடித்து உறையூரில் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில்,

loan point

சோழ மன்னர்களின் தலைநகராம் உறையூர். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக இருந்தவர். நிதி ஆதாரத்தை 40 கோடியாக உயர்த்தியவர் , பாதாள சாக்கடை திட்டம், நடைபாதை, சாலையோர பூங்கா உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்தியவர். இவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் விரிவாக்கம், நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவார்.

nammalvar
web designer

மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுஅவர்களுக்கு நமது துரோகிகள் துணை போகிறார்கள். வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றி இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். தேசிய கட்சியை நம்பி எந்த பயனும் இல்லை. அம்மா காவிரி மேலாண்மையை கூட நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற்றவர். நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ள இயற்கை செல்வங்களை எடுக்கின்றார். அனைத்து இயற்கைச் செல்வங்களையும் எடுத்தால் விளைநிலங்கள் எல்லாம் பொட்டல் காடாக மாறி சோமாலியா நாடாக முயற்சிக்கின்றார்கள். மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்கள் .ஆனால் ஒரு கோடி பேருக்கு கூட கொடுக்கவில்லை. மேலும் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார்.

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் மக்களை வஞ்சித்து விட்டார் .இதனால் தொழில் புரிபவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 6 லட்சம் குடும்பத்தினர் நடுத்தெருவில் உள்ளார்கள். இன்று அனைத்து துறையிலும் பின்தங்கி உள்ளோம். அடிமை அரசின் கையாலாகாத் தனத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம். நமக்கு சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது சின்னம் வழங்க உத்தரவிட்டது. 36 சின்னங்களை கொடுத்தார்கள். அதில் ஸ்க்ரூ ட்ரைவர், டூத் பேஸ்ட் ,செருப்பு என்று பல்வேறு சின்னங்கள் இருந்தன. ஆனால் தெரியாமல் பரிசுப்பெட்டகம் சின்னமும் அதில் இருந்தது. உடனே அம்மா தாய் சேய் திட்டத்திற்கு வழங்கிய பரிசு திட்டம் நினைவுக்கு வந்தது. உடனே பரிசு பெட்டக சின்னத்தை பெற்றோம்.

இன்று பட்டி ,தொட்டி எல்லாம் பரிசு பெட்டகம் தான் ட்ரெண்டிங். நமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க தேவையில்லை மக்கள் தான் அங்கீகாரம் தர வேண்டும் .இங்கே தினம் ஒரு கட்சியில் இருந்து தற்போது காங்கிரஸில் போட்டியிடுகிறார் . வாக்கு சேகரிப்பு கூட்டத்திலும் தூங்கி விடுகின்றார். இவர் திகழ்கிறார் வில் சேர்ந்து விடலாம். வாக்காளப் பெருமக்கள் திருச்சியின் வெற்றி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கூறினார்.

மாநகர செயலாளர் சீனிவாசன் இணைச்செயலர் சேட், லதா, sdpi மாநகர செயலாளர் ஹஸன், அமமுக திருச்சி அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ,ராஜா, உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலாளர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் ஒரு மலைப்பகுதி செயலர் சங்கர் தில்லை நகர் பகுதி செயலாளர் இப்ராஹிம் பிச்சை வழக்கறிஞர் மணிவண்ணன் மகளிரணி செயலர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநில மாநகர பகுதி வட்டக் கழக சார்பில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.

செய்தி -வெற்றி செல்வன்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.