
திருச்சியில் தற்கொலையில் முடிந்த காதல் திருமணம்.
காதல் வைபோகத்தில் காலியாகிக் கொண்டிருக்கும் காதலர்கள் பலர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகின்றனர். அதிலும் பெரும்பாலும் சாதிய அடிப்படையில் சேர முடியாமலும், சேர்ந்தால் வாழ முடியாமலும், இருப்பதால் பலர் தற்கொலை என்னும் துரிதமான முடிவை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர், பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது-26), இவருக்கு சமீபத்தில் தான் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது, மேலும் பிரவீன்குமார் சாதியின் அடிப்படையில் சாதி மாற்றி திருமணம் செய்ததால் இரு வீட்டாருக்கும் முக சுழிப்பு ஏற்பட்டது. இருப்பினும் பிரவீன்குமார் தனிக்குடும்பம் செல்வதற்காக இருந்த வந்த நிலையில் அவரது மனைவி தாலி பிரித்துப்போடும் நிகழ்விற்கு சென்றவர், திரும்பி வீட்டிற்கு வரவில்லை, இந்நிலையில் பிரவீன்குமார் நேற்று இரவு தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். திருச்சியில் தொடர்ந்து நிலவும் இதுப்போன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
