
திருச்சியில் கல்லா கட்ட தொடங்கியது கள்ள லாட்டரி.
திருச்சியில் சமீபகாலமாக கள்ள லாட்டரியின் தாக்கம் பெரிதளவு இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல தலை நிமிர்த்த தொடங்கியுள்ளது லாட்டரி விற்பனை. சமீபத்தில் திருச்சியில் பிரபல லாட்டரி விற்பனையாளர் எஸ்.வி.ஆர் மனோகரன் கைது செய்ததையடுத்து, மீண்டும் ஒரு நபர் லாட்டரி விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியில் கள்ள லாட்டரி விற்பனை நடந்து வருவதாக உறையூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் படிப்படையில் நேற்று மதியம் 2 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வேல்முருகன் (வயது 45) எனும் நபரை கைது செய்ததுடன் அந்நபரிடம் இருந்து கள்ள லாட்டரியையும், 440 ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்நபர் மீது சட்ட விரோதமாக செயல்பட்டதையடுத்து கண்டீத்து வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
