திருச்சியில் அரசு டாக்டரின் வீடு புகுந்து 18 பவுன் நகைகள் திருட்டு

0
Business trichy

திருச்சியில் அரசு டாக்டரின் வீடு புகுந்து 18 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலிசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் எல்லைக்குட்பட்ட குமரன் நகர் 16-வது குறுக்குத் தெருவில் வசித்துவரும் சந்திரன் (வயது 50). இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கோடை வெயில் கடுமையாக அடித்துவருவதால் இரவு வேலையில் மின் விசிறி ஓடினாலும் வீட்டிற்குள் அதிக புழுக்கம் ஏற்படுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடிகளில் இரவு படுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 1-ந் தேதி தனது வீட்டின் அனைத்து கதவுகளை மூடிவிட்டு மாடியில் துங்க சென்று விட்டார். வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்தினர் படுத்திருந்தனர்.

இந்த நிலையில் இரவு வேளையி்ல் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் பின் பக்க கதவினை கடப்பாறையால் நெம்பி வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி டம்ளர்கள் திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். மறுநாள் (2-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு மாடியில் இருந்து இறங்கிவந்த டாக்டர் சந்திரன் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடைப்பதையும்  பீரோவில் உள்ள 18 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி டம்ளர்கள் திருட்டு போயிறுப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் ஆட்கள் அயர்ந்து துங்கிகொண்டிருந்த வேளையில் மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு 3 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.

Half page

புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.