திருச்சியில் தேர்தல் வேட்டையில் குட்கா சிக்கியது.

0
1

திருச்சியில் தேர்தல் வேட்டையில் குட்கா சிக்கியது.

Helios
2

திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இரவு/ பகல் என இரு வேலைகளும் மத்திய போலீசாரும் , பறக்கும் படையினரும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த ஒருவாரமாக பல நூறு கோடி பணமும், தங்க நகைகள் போன்றவை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து இன்று கே கே நகர் உடையாம்பட்டி ரயில்வே கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த வாகனத்தில் 35 பாக்ஸ்ல் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் புதுக்கோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் முத்துக்கருப்பன் தலைமையிலான குழு கே கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.