கிருஷ்ணா டாவின்சி காலமான நாள் இன்று.

0
Business trichy

கிருஷ்ணா டாவின்சி காலமான நாள் இன்று.

அகிலன் சித்தார்த், வால்பையன், கின்ஸி போன்ற புனைப் பெயர்களில், அரசியல், சமூகம், கலை, நகைச்சுவை போன்ற அனைத்து துறைகளிலும், தன் எழுதுகோலால் முத்திரை பதித்தவர் கிருஷ்ணா டாவின்சி!

வெங்கடகிருஷ்ணன் எனும் இயற்பெயர் கொண்டவர்; லியானர்டோ டாவின்சி போல, பல துறைகளிலும் வல்லுனராக வேண்டும் என்று, தன் பெயரை கிருஷ்ணா டாவின்சி என மாற்றிக் கொண்டார்.

Full Page

தென்னக ரயில்வே துறையில், பயணச் சீட்டு ஆய்வாளராக இருந்தவர், அப்பணியை உதறிவிட்டு எழுத்துலகத்திற்கு வந்தார். குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார்;

தமிழ் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதல் பொறுப்பாசிரியராக பணியாற்றினார்.

கார்கில் போரின் போது, நேரடியாக களத்துக்குச் சென்று செய்தி எழுதினார்; விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தார்!தமிழ் எழுத்துலகிற்கு, 28 நாவல்கள், 50 சிறுகதைகள் மற்றும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதித் தந்துள்ளார்.

அப்பேர்பட்ட கிருஷ்ணா லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து இதே நாளில் காலமாகி விட்டார்..(2012 ஏப்., 4ம் தேதி)

Half page

Leave A Reply

Your email address will not be published.