ஒரு விரல் மை – எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?

0

ஒரு விரல் மை – எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?

 

வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவருடைய கை ஒரு விரலில் ஒரு துளி மை வைப்பார்கள் இந்த அடையாள மையானது கள்ள ஓட்டை தடுப்பதற்கு வைப்பதாகும் கர்நாடக மாநிலம் மைசூரில் மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் என்கிற நிறுவனம் தேர்தல் ஆணையத்திற்கு 1962ல் இருந்து 57 ஆண்டுகளாக மை தயாரித்து வழங்குகிறது 1937 இல் மைசூர் லாக் அண்ட் பெயின்ட் வொர்க் லிமிடெட் என்கிற பெயரில் நல் வாடி கிருஷ்ணராஜ உடையார் என்பவரால் துவக்கப்பட்ட தொழிற்சாலை இதுவாகும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

‌சந்தா 1
சந்தா 2

கர்நாடகா கேரளா மாநிலங்களில் இயங்கும் பேருந்துகள் மைசூர் பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. பி எஸ் என் எல் பி ஹெச் இ எல் இந்தியன் ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் தேவைகளுக்கு பெயிண்ட் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு மட்டுமின்றி ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் நேபாளம் கம்போடியா சிங்கப்பூர் துருக்கி பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மைசூர் மைதான் வழங்கப்படுகிறது அளிக்க முடியாத அடையாளம் 5 மில்லி 7.5 மிலி 20 மிலி 30 மிலி 50 மிலி 60 மிலி 80 மிலி 100 மிலி அளவிலான பாட்டில்களில் தயார் செய்து வழங்கப்படுகிறது.

 

வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு இவை விநியோகிக்கப் படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.