இம்புட்டுத்தான் ரபேல் !

0
Business trichy

இம்புட்டுத்தான் ரபேல் !

2000-01ல் நீக்கப்பட வேண்டிய
மற்றும் வாங்கவேண்டிய விமானங்களை பட்டியலிட்டு, மிக் – 21, மிக் – 27
விமானங்களுக்கு பதிலாக,
ஒற்றை இயந்திரம் கொண்ட 126 விமானங்கள் வாங்க வேண்டும் என பரிந்துரைத்தது.

இதன்படி 2007 ஆகஸ்ட்டில் 126 நடுத்தர பல்பயன் போர்
விமானங்களை (Medium Multirole Combat Aircraft – MMRCA)
வாங்குவதற்கான டெண்டர்
விடப்பட்டது. அடையாளம் காணப்பட்ட 6 நிறுவனங்களுக்கான டெண்டர் படி, 126 விமானங்களின்
மொத்தவிலை அப்போது ரூ 42,000 கோடி. ஒரு விமானத்தின் விலை
ரூ 333 கோடி.

Kavi furniture

இந்த நடைமுறையின் இறுதியில் யூரோ பைட்டர் டைபூன், ரபேல் விமானங்கள் தொழில்நுட்ப
அடிப்படையில் ஒரே தளத்தில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டு குறைவான விலை கொடுப்பவர்களிடம் வாங்க முடிவாகி ல், விலை விவரங்கள் கோரப்பட்டு அதனடிப்படையில் ரபேல் இறுதியானது.

ஒப்பந்தப்படி, 18 விமானங்களை பிரான்சில்
உற்பத்தி செய்து பறக்கத் தயாரான நிலையில் நேரடி கொள்முதல், மீதி 108 விமானங்களை
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது என முடிவானது.

இதில் ஊழல்
குற்றச்சாட்டுகள் வந்து விடக் கூடாது என்று அப்போது பாதுகாப்புத்
துறை அமைச்சராக இருந்த ஏ.கே ஆந்தோனி இரண்டு முறை இது
தொடர்பாக விசாரணை நடத்தி எந்த முறைகேடும் நடக்கவில்லை
என்று உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் 2014ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றது. பதவி
ஏற்றவுடன், “தசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடர
முடியாது. அதற்குப் பதிலாக சுகோய் விமானங்களை (SU-30MKI)
வாங்க அரசு முயற்சிக்கும்” என்று மோடியின் பாதுகாப்பு அமைச்சர்
மனோகர் பாரிக்கர் அறிவித்தார்

இதற்கு ராணுவத் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. “மீண்டும்
கொள்முதல் நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்து துவங்குவது
காலதாமதத்திற்கு வழிவகுக்கும்” எனவும் “சுகோயும் ரபேலும்
தொழில்நுட்ப ரீதியாக இணையானவை கிடையாது. எனவே, ரபேல்
விமானம் வாங்குவதை கைவிடக் கூடாது” எனவும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.

இப்படி விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே தசால்ட்
நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் ட்ராப்பியர் மார்ச் 2015ல்
இந்தியா வந்து “ஒப்பந்தம் செய்வதற்கு 95 சதவீதம் பேசி முடித்து
விட்டோம்” என்றார். “நாங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
நிறுவனத்தின் உற்பத்தித் தளத்தை பார்வையிட்டோம். இவர்களின்
செயல்திறமை பிரமிக்க வைக்கிறது” என்று பாராட்டிச் சென்றார்.

இதற்கிடையே அனில் அம்பானியை தலைவராக கொண்டு
செயல்படும் ரிலையன்ஸ் திருபாய் அம்பானி குழுமம், ரிலையன்ஸ்
டிபன்ஸ் என்றொரு நிறுவனத்தை மார்ச் 28, 2015 அன்று பதிவு
செய்கிறது. அனில் அம்பானி பிரான்ஸ் சென்று பிரெஞ்சு பாதுகாப்புத்
துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

2015 ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி பாரிஸ் சென்றார். அவருடன்
அனில் அம்பானியும் சென்றார். அது வணிக உறவு தொடர்பான சாதாரண பயணம் என்றே எல்லோரும்
எண்ணியிருந்தார்கள். ஆனால், 36 ரபேல் விமானங்களை
பறக்கத் தயரான நிலையில் தசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்போவதாக அந்த நாட்டிலேயே அறிவித்தார் மோடி. அறிவிப்பில் இந்தியாவில் உற்பத்தி
செய்வது பற்றி எந்த பேச்சும் இல்லை.

பிரதமர் இந்தியா வந்தபின் தனது பயணம்தொடர்பான அறிக்கை
எதையும் வெளியிடவில்லை.
126 விமானங்கள் வாங்குவதற்கான
டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் தசால்ட் நிறுவத்திடமிருந்து
36 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை
துவங்கியதாகவும் ஜூலை 2015-ல் மாநிலங்களவையில் ராணுவ
அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார்.

இதற்கிடையில், ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார் மூலதனம்
ஆதிக்கம் பெற ஆலோசனை கூற அமைக்கப்பட்ட
தீரேந்திர சிங் கமிட்டி தனது அறிக்கையை ஜூலை 2015-ல்
தாக்கல் செய்தது.

இந்தக் கமிட்டி
போட்டியை வலுப்படுத்தவும், திறமையை வளர்க்கவும்,
விரைவாகவும் கணிசமாகவும் தொழில் நுட்பத்தை உள்வாங்கிக்
கொள்ளவும் கேந்திர கூட்டு முன்மாதிரி (Strategic Partner Model) என்ற
கொள்கையை அறிவித்தது.

எல்&டி, மகிந்த்ரா அண்ட்
மகிந்த்ரா, ரிலையன்ஸ் இந்தியா, டாடா குழுமம், அதானி குழுமம்
ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கப்பட்டன. இவை போர்
விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள். ஆயுத
வாகனங்கள், பெரும் பீரங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தியில்
ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதுவரை, 10 பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டு வந்தன. 2015-ல் இவை ரூ
33,304 கோடி மதிப்பிலான தளவாடங்களை உற்பத்தி செய்திருக்கின்றன. 2018-19ல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி
நிறுவனத்தின் (DRDO) வரவு செலவு திட்டம் ரூ 17,861 கோடியாகவும்
தளவாடதொழிற்சாலை (Ordinance Factory)யின்வரவு செலவு திட்டம்
ரூ 1,531 கோடியாகவும் குறைந்துள்ளது.

செப்டம்பர் 2016-ல் கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில்
பிரதமர் ரபேல் நிறுவனத்திடமிருந்து 36 விமானங்கள்
வாங்குவதற்கான ஒப்பந்த நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டு
விட்டதாக அறிவித்தார். இதில்
இந்துஸ்தான் ஏரோநாட்டிஸ்-உடன் இணைந்து தசால்ட் இந்தியாவில்
விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆப்செட் ஒப்பந்தம்
கிடையாது.

MDMK

வெளிப்படை கொள்முதல் கொள்கையின் படி தகவல் அறியும்உரிமை மூலமாக பெறப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த
பத்திரிகையாளர்கள் ஆகஸ்ட் 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டி ருப்பதாக
கண்டறிந்தனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை எந்த அறிவிப்பும் செய்யாமல் ரத்துசெய்துவிட்டு, அவசர அவசரமாக 36 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் மோடி.

பாதுகாப்புத்துறை விதிகளின்படி, டெண்டர் கோரி நிறுவனங்களை தேர்ந்தெடுத்தல், பல நிறுவனங்களை போட்டிக்கு அழைத்து விலையைக் குறைக்கும் நடவடிக்கைகள் அப்பட்டமாக புதைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு பேசிய ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை
ரூ 428 கோடி. சிறப்பு மேம்பாடுகளைச் சேர்த்தால் 570 கோடி. 2016-ல் மோடி அரசு பேசிய விலை ரூ 1600 கோடி ! ஏன் விலையேற்றம் என்ற கேள்விக்கு மோடி அரசு தரும் பதில் ‘ அது ராணுவ ரகசியம்’!

அக்டோபர் 2016-ல் தசால்ட்-ம் ரிலையன்ஸும் தனியாக ஒப்பந்தம் போட்டன. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து
அக்டோபர் 3, 2016ல் தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட்
என்ற நிறுவனத்தை துவங்கின. ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம்
51%, தசால்ட் நிறுவனம் 49% பங்கு வீதத்தில் தொடங்கியிருக்கும்
தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 36 விமானங்களுக்கான
ரபேல் ஒப்பந்தத்தின் ஆப்செட் வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும்
என்று அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார்.

அதாவது, தசால்ட் நிறுவனத்துக்கு முன்பு பேசிய விலையைவிட
மூன்று மடங்கு கொடுத்து, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் உபரி
லாபமே அம்பானியுடன் துவங்கிய கூட்டு நிறுவனத்தின் முதலீடாக
வருகிறது !

தீர்மானிக்கப்பட்ட 126
விமானங்களில் 36ஐ மட்டும் வாங்கினால் மீதி 90ன் கதியென்ன
என்று கேட்பவர்களுக்கு மோடி அரசு கொடுத்த பதில் 1000 வோல்ட் ஷாக்! 110 விமானம் வாங்க இன்னொரு
டெண்டர் விடப்பட்டுவிட்டது. அதில் போட்டியிடுபவர் மோடியின் வணிகக்கொழுந்து அதானி !
இவர் ஸ்வீடன் நாட்டு சாப் (Saab) நிறுவனத்துடன் கூட்டு
உடன்படிக்கை செய்து போட்டியில் இருக்கிறார்.

இந்நிலையில், தசால்ட் நிறுவனத்துடன் பேரம்பேசும்போது அதற்காக நியமிக்கப்பட்டக் குழு பேசிக்கொண்டிருக்கும்போதே, பிரதமர் அலுவலகத்திலிருந்து கொல்லைப்புறமாக தனியாக பேசியுள்ளார்கள். இதனால், இந்தியாவின் பேரம் பேசும் வலு குறைந்து பிரான்ஸ் நிறுவனத்துக்கு லாபமானது.

புதிய ஒப்பந்தத்தில், தசால்ட் நிறுவனமும் பிரான்ஸ் அரசும் வங்கி உத்தரவாதம்
வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியதன் மூலம் மட்டும் தசால்ட்
நிறுவனத்துக்கு €57.4 கோடி (ரூ 4,477 கோடி) செலவு குறையும் !

ரபேல் விவகாரம் குறித்து சி.ஏ.ஜி தணிக்கை ஆய்வு செய்ய நினைத்தபோது, ‘ரபேல் நிதி விவகாரத்தில் தலையிடுவது நாட்டின் பாதுகாப்பு ரகசியம் தொடர்புடையது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி தணிக்கையைத் தடுத்தது.

இருந்தும் CAG அறிக்கை முக்கிய தவறு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா கேட்கும் மேலதிக வசதிகளுக்காக ரபேல் கூடுதல் தொகை கேட்கிறது. நியாயப்படி இந்த்ததொகையை விமான விலைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டும்.

ஆனால், மோடியின் புதிய ஒப்பந்த்ததில், விமான விலையை குறைத்துக்காட்டுவதற்காக மேலதிக வசதித்தொகையை விமான விலைக்குள் சேர்க்கவில்லை. மாறாக, விலையை மற்ற நிறுவனங்களுக்கு இணையாக இட்டுக்கட்டியுள்ளனர் என CAG அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா கேட்ட விமானத்தில் 14 அம்சங்கள் இருக்கவேண்டும். ரபேல் 8 அம்சங்களுடன் உடனடியாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், விலையைக் கணக்கிடும்போது 14 அம்சங்களுக்கும் சேர்த்து கணக்கிட்டுள்ளனர் !

அப்படி என்றால், நட்டத்தில் செத்துக்கொண்டிருந்த அனில் அம்பானிக்கு சுமார் 300000000000 கோடி மக்கள் வரிப்பணம் லாபம். தன் தேவைக்காக, உலகின் ஒட்டுமொத்த தளவாட இறக்குமதியில் 9.5% இறக்குமதி செய்யும்
இந்தியாவிடம் பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்ய போட்டியேபோடாமல், லம்ப்பாக பல்லாயிரம் கோடி லாபம் !

ஒருவேளை கமிஷன் தொகை அடித்திருந்தால் மோடி கும்பலுக்கு சில ஆயிரம் கோடி லாபம்.

மோடியை உண்மையான தேசபக்தர் என நம்பிக்கொண்டிருக்கும் வெகுசில அப்பாவி தேசபக்த இந்துக்களுக்கு பட்டை நாமம் !

ஜெய் நிம்மி மாமி !

– விவேக் கணநாதன்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.