தேர்தல் விளம்பரங்கள் பாஜக தான் நம்பர் ஓன்

0
D1

தேர்தல் பிரச்சாரத்துக்காக ஊடகங்களில் அரசியல் கட்சிகள் செய்யும் விளம்பரங்களில் 53 சதவிகிதப் பங்களிப்புடன் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்கள் சார்ந்த ஆய்வு நிறுவனமான டாம் மீடியா ரிசர்ச் நிறுவனம் இந்தியாவில் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட விளம்பரங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைக் கவரும் நோக்கத்தில் அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த விளம்பரங்களில் பாஜகவின் பங்கு 53 சதவிகிதமாக இருக்கிறது. பாஜகவைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் விளம்பரப் பங்கு 14 சதவிகிதமாக இருக்கிறது.

N2

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் பங்களிப்பு 6 சதவிகிதமாகவும், தமிழகத்தின் அமமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 3 சதவிகித பங்குகளுடன் அதிக விளம்பரம் செய்த அரசியல் கட்சிகளுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் உள்ளன.
ஜனவரி 1 முதல் மார்ச் 16 வரையிலான காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கும் ஊடகமாக வானொலி உள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் வானொலி விளம்பரங்கள் 16 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன.

D2

எனினும், 2014 தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் செய்த விளம்பரங்களை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் தொலைக்காட்சி விளம்பரங்கள் 83 சதவிகிதமும், அச்சு ஊடக விளம்பரங்கள் 9 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.