திருச்சி குவாரியில் தந்தை- மகன் பலி !

0
1

திருச்சி குவாரியில் தந்தை- மகன் பலி ! 

திருவெறும்பூர் அருகே  உள்ள வாழவந்தான்கோட்டை பொது பர்மா காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது 32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ரத்னா. இவர்களுடைய மகன் கார்த்தி(9), மகள்கள் பிந்தியா(6), கங்கனா(5). கார்த்தி அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

2

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் சுமார் 300 அடி ஆழம் கொண்ட ஒரு குளம் உள்ளது. அதில் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இதில் குளிப்பதற்காக கணேசன் நேற்று மாலை தனது மகன் மற்றும் 2 மகள்களை அழைத்து சென்றார். அப்போது, கார்த்தி தண்ணீரில் தவறி விழுந்தான். இதனால் கணேசன் தண்ணீரில் குதித்து தனது மகனை காப்பாற்ற முயன்றார்.

4

ஆனால் அவர்களால் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதைப்பார்த்த 2 சிறுமிகளும், அருகில் உள்ள அகதிகள் முகாமிற்கு ஓடிச்சென்று தங்கள் தந்தையும், அண்ணனும் தண்ணீரில் மூழ்கிவிட்ட விவரத்தை கூறி அழுதுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள், கல்குவாரிக்கு ஓடிவந்து குளத்தில் பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் கார்த்தியும், கணேசனும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இதை தொடர்ந்து துவாக்குடி போலீசாருக்கும், நவல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு நீண்ட நேரம் ஆனதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் அவர்களின் உடல்களை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மீண்டும் அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையும், அண்ணனும் கண் முன்னே தண்ணீரில் மூழ்கியதை பார்த்த சிறுமிகள் இருவரும் தண்ணீரில் இறங்காமல், ஓடிச்சென்று பெரியவர்களை அழைத்து வந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்