திருச்சியில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம் படிப்பு சொல்லித் தருவதாக பாலியல் துன்புறுத்தல்

0

கரூரை சேர்ந்த வக்கீல் திவாகர் (30). இவர் திருச்சி பீமநகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்துக்கு அருகே வசிக்கும் கூலித்தொழிலாளி குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவரது மகள் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

சிறு வயது முதலே படிப்பதற்காக வக்கீல் அலுவலகம் உள்ள மாடிபகுதியை பயன்படுத்துவது பழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கே அலுவலகம் அமைக்க வாடகைக்கு வந்துள்ளார் திவாகர். அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மாடிக்கு படிக்க வரும் மாணவியிடம் பேச்சு கொடுத்து பாடம் சொல்லித் தருவது போன்று பழக ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் படிப்பு சொல்லி கொடுப்பது போன்று அடிக்கடி பேசியவர் தேர்வு நேரத்தில் அவ்வப்போது சீண்ட ஆரம்பித்திருக்கிறார்.

தனக்கு கணக்கு பாடம் நன்றாக தெரியும் என்றும், கணக்கு தேர்வுக்கு சொல்லித் தருவதாகவும் கூறி, உச்சக்கட்ட பாலியல் வன்மத்தை ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து தப்பிய அந்த மாணவி, இதனை வெளியே சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடும். அதே நேரம் தேர்வு எழுவதில் சிரமம் ஏற்படும் என்று நினைத்து யாரிடம் எதுவும் சொல்லாமல் தனது உறவினரின் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

food

ஆனால், அந்த வக்கீலோ மாணவி வீட்டில் எதுவும் சொல்லவில்லை. அதானால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிற தைரியத்தில் மாணவி குளிக்கும் நேரம் பார்த்து குளியலறை உள்ளே குதித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு அலறியிருக்கிறார். ஆனால், வக்கீல் திவாகர் அந்த மாணவியை செல்போனில் படம் பிடித்திருக்கிறார். இதற்கு மேல் இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல் தனது தந்தையிடம் முறையிட, மாணவியின் தந்தை பாலக்கரை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதன் பின்னர் வழக்கு விசாரணை கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றது. சம்மந்தப்பட்ட பெண்ணை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

 

அப்போது கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்த பெண் காவலர்கள் அந்த மாணவியிடம் ‘‘இதுக்கு போய் ஏதுக்குமா புகார் கொடுக்கிற, தேவையில்லாத பிரச்சனை வரும்’’ என்று மாணவியின் புகாரை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி, ‘‘ஒருவேளை அவன் என்னை கெடுத்து நா வாயும் வயிறுமா வந்து நின்னா, நீ இடம் கொடுக்காமல அவன் அப்படி செஞ்சிருப்பான் என்னைய தான் திட்டுவீங்க. இப்ப அதுக்கு இடம் கொடுக்காம அவன் மேல புகார் கொடுத்தா வாபஸ் வாங்குன்னு சொல்லி என் மனசை மாத்த முயற்சி பண்றீங்க. உங்க பொண்ணுக்கு இதுமாதிரி நடந்தா என்ன பண்ணியிருப்பீங்க’’ என்று எதிர் கேள்வி கேட்டவுன் அதிர்ச்சியடைந்த மகளிர் காவலர்கள், வக்கீல் திவாகர் மீது வழக்கு பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் வக்கீல் திவாகர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மகள்களை தைரியத்துடனுடம் எல்லாவற் றையும் பகிர்ந்து கொள்ளும்படி வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடைமையாகும்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.