எம்.பி. தேர்தலை விட அனல் பறக்கும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்!

0
1

எம்.பி. தேர்தலை விட அனல் பறக்கும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

 

திருச்சிராப்பள்ளியில் கன்டோன்மென்ட் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களை விசாரிப்பதற்காக 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நீதிமன்றம் அடிக்கல் நாட்டப்பட்டு 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.

2

நூறாண்டு கண்ட நீதிமன்றத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றமாக புதிய கட்டிடம் செயல்படுகின்றது. நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் 6 , மாவட்ட நீதிமன்றம் 4, சார்பு நீதிமன்றம் 4, உரிமையியல் நீதிமன்றம் 4 , மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட குடும்ப நல நீதிமன்றம், மாவட்ட மகளிர் நீதிமன்றம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம், மாவட்ட தொழிலாளர் நீதிமன்றம், நில அபகரிப்பு பிரிவு நீதிமன்றம், ஊழல் தடுப்பு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம், மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், சிறப்பு மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் என சுமார் 28 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மேலும் தொழிலாளர் துணை ஆணையர் தீர்ப்பாயம் திருச்சியில் செயல்படுகின்றது. வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகின்றது.

 

இங்கு மணப்பாறை, முசிறி ,லால்குடி, துறையூர் தாலுகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வழக்கறிஞர்கள் பணிபுரிகிறார்கள். வழக்கறிஞர்கள் தொழில் நலனுக்காகவும் வழக்கறிஞர்கள் உரிமைகளுக்காகவும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம்

(2/1911-12) துவங்கப்பட்டு செயல்படுகின்றது. மேற்கண்ட நீதிமன்றங்களில் தொழில் புரிகின்ற வழக்கறிஞர்கள் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பலர் உறுப்பினர்களாக உள்ளார்கள் சுமார் சங்க உறுப்பினர்களாக 2000 நபர்கள் உள்ளார்கள்.

4

சங்கத்தில் ஆயுள் சந்தா ஆண்டு சந்தா செலுத்தியவர்கள் 1050 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள் . சுமார் 900 வழக்கறிஞர்கள் வாக்குப்பதிவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். தலைவர், செயலர் ,இணை செயலர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என்று அனைத்து நிர்வாகிகளும் தேர்வுசெய்வார்கள்.

 

2018-2019 தலைவராக பன்னீர்செல்வம், செயலராக ஜெயசீலன், பொருளாளர் கமாலுதீன் உள்ளிட்ட நிர்வாக குழு செயல்பட்டது 2019-2020 சங்க தேர்தலை முன்னிட்டு தலைவர் பொறுப்பிற்கு வைரமணி ,ரமேஷ், கமாலுதீன் துணைத்தலைவர் பொறுப்பிற்கு பாலு, சிவகுமார் செயலர் பொறுப்பிற்கு மதியழகன் ,ராஜசேகர், சிவகுமார் போட்டியிடுகின்றார்கள்.

 

மேலும் பொருளாளர், நூலகருக்கு உள்ள பொறுப்புகள் விண்ணப்பிப்பவர்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பலர் உள்ளார்கள் .

 

மேலும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் தவிர குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மோட்டார் விபத்து இழப்பீடு வழக்கறிஞர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் உள்ளன. அவர்கள் பிற சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள் .சங்க பொறுப்பிற்கு போட்டியிடும் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரையும் நேராக சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றார்கள்.

 

சங்க உறுப்பினராக மட்டும் இருந்து வழக்கறிஞர்கள் பணியில் ஈடுபடாமலும் இருப்பார்கள் அவர்கள் சங்க உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்று வாக்களிக்கும் உரிமை பெற்று இருப்பார்கள் நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சி சார்பிலும் சிலர் உறுப்பினர்களாக உள்ளார்கள் .

 

தேர்தல் காலமாக உள்ள சூழலில் அவர்கள் வருவது கேள்விக்குறிதான் எனினும் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வழக்கறிஞர்களும் எம்.பி.தேர்தலை விட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். தங்களுக்கு ஆதரவு கேட்டு ஒவ்வொரு சீனியர் வழக்கறிஞர்களையும் தனிப்பட்ட முறையில் நோட்டிஸ் கொடுத்து தங்கள் வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டே வருகிறார்கள்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.