சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் மாணவியர் பேரவை நிறைவு விழா

0
1

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் கல்லூரிப்பேரவை நிறைவு விழா கடந்த 29ம் தேதி  நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.பத்மாவதி கல்விநிறுவனத்தின் சிறப்பையும், நிறுவனரின் கல்விச்சேவையினையும் போற்றியதோடு, சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அவர்தம் சாதனைப்பணிகளை எடுத்துக்கூறி வரவேற்புரை வழங்கினார். விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு.N.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

 

அவர்தம் சிறப்புரையில், இந்தியாவிலேயே புகழ்பெற்ற கல்லூரியாகத் திகழும் இக்கல்லூரி மாணவியர் தங்கள் பாடங்களை கவனமுடனும், ஆர்வமுடனும் கற்று ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும், TNPSC போட்டித்தேர்வுகளில் குரூப்-4 தேர்வில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல், IAS, IPS போன்ற முதல்நிலைத் தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

4

மிகப்பெரிய வேலைவாய்ப்புச்சந்தை மாணவியருக்கென காத்திருக்கின்றது. திறமையானவர்களைவிட சராசரியானவர்கள் வாழ்வில் உயர்ந்த பதவிகளை அடைவதற்கு தன்னம்பிக்கையே காரணம் என்றும், உங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கே உரியது என்றும் கூறினார். மேலும், மாணவியர் அரசு வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிராமல் சுயதொழில் செய்பவர்களாக, சிறந்த தொழிலதிபர்களாக மாணவியர் உருவாக வேண்டுமென்பதை, ஆபிரஹாம் லிங்கன், அப்துல்கலாம் போன்றோரின் பொன்மொழிகளின் வாயிலாக எடுத்துரைத்து நல்லதோர் சிறப்புரையாற்றினார்.

2

கல்லூரிப்பேரவை மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து துறைசார் பேரவைகளின் செயல்பாடுகளும், NSS, NCC,YRC, விளையாட்டுத்துறை போன்றவற்றின் செயல்பாடுகளும், சாதனைகளும் ஆண்டறிக்கையாக வாசிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்விழாவில் வளாக கல்விஆலோசகர் முனைவர்.உஷாசந்திரசேகரன், துணைமுதல்வர் முனைவர்.வாசுகி இருவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பொருளாதாரத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சுந்தரி நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

 

3

Leave A Reply

Your email address will not be published.