உயிர் வளர்ப்போம் – 19

கதை வழி மருத்துவம்

0
1

நாடிப் பரிசோதனையில் முதல் நிலை நாடி பரிசோதிக்கும் மருத்துவர் தன் மனதினை இறைநிலையில், இறைலயத்தில் வைத்திருக்க வேண்டும். விண்ணிலேவெளிக்குள் வெளி கடந்து நிற்கும் ஏகஇறைவனை மனதில் எண்ணியபடி,

இறைவா உமது கருணை மழைப் பொழிந்து இந்தமருத்துவத்தைஆசீர்வதிக்க வேண்டும்.

நாடியின் வாயிலாகஎமக்கு இப்பயனாளியின் உள்நிலையைதெளிவாகஉணர்த்தி அருள வேண்டும்.

4

இவரது உள்நிலை மாற்றத்தைசீர்படுத்தும் நற் தீர்வினை தாங்களேஎம்முள்ளிருந்து அளிக்க வேண்டும்.

இவரது ஆரோக்கியத்திற்கு தாங்களேமுழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இவரைசுகப்படுத்தி அருள வேண்டும்.

என்றஇந்தநான்கு கோரிக்கைகளையும், மனதைஇறைவனிடத்தில் வைத்தபின்னர் நாடி பார்க்க தொடங்கிட வேண்டும்.

நாடி பரிசோதனையில் இரண்டாம் நிலை பயனாளரைசமநிலை படுத்துவதாகும்

பயனாளரைஓர் ஆசனத்தில் நேராகஅமர வைத்து, ஆழ்ந்தஉட்சுவாசம் மற்றும் மெல்லிய தளர்வானவெளிச்சுவாசம் செய்யபணித்தல் வேண்டும்.

இதன்பின்னர் பயனாளரைவெளிக்குள் வெளியாய்நிற்கும் இறைவனை மனதில் எண்ணியபடி, இறைவா எனக்கு இம்மருத்துவத்தின் வாயிலாகபூரணஉடல் நலமும், மனநலம் தந்து உள்நிலை ஆற்றலை பெருக்கி சுகப்படுத்தி அருள வேண்டும் என்ற கோரிக்கையைஇறைவனிடத்தில் வைக்க செய்யவேண்டும்.

நாடிப் பரிசோதனையில் மூன்றாம் நிலை- நிலையறிதல்

நாடி பார்க்க வேண்டிய இடங்களின் நிலையைஅறிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு கையிலும் மூன்று இடங்களில் நாடி பார்த்தல் வேண்டும். தமது கையில் கட்டைவிரலுக்கு கீழாகஉள்ளஉருளைவடிவ மணிக்கட்டு எலும்பிற்கும் உள்ளங்கையின் கீழ்ஓடுகின்றஇருதலை தலை தசைநாறுக்கும் இடையேஉள்ளஒரு சுட்டுவிரல் நுனி பதிக்கும் அளவுள்ளஇடமேநாடி பார்க்கக் கூடிய மத்திம பிரதேசம் ஆகும். மத்திம பிரதேசத்திற்கு நேர் கீழேஅமைந்திருப்பது கீழ்பிரதேசம் என்றும், மத்திம பிரதேசத்திற்கு நேர் மேலேஅமைந்திருப்பது உத்தம பிரதேசம் என்றும் அழைக்கப்படும். இந்தமூன்று இடங்கள் தான் நாடி பார்க்கப்பட வேண்டிய பிரதானநிலைகள். இந்தமூன்று நிலைகள் ஒரு நபரின் கைக்கும் உடலமைப்புக்கும் தக்கபடி சற்றேமாறுபடும். எனவேஇந்தநிலைகளைபயனாளரின் உடல்வாகு, உயரம் ப�ோன்றவற்றைக்கொண்டு மனதால் கணித்துக் கொள்ளவேண்டும்.

நாடி பரிசோதனையில் ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பஞ்சபூதத்தின் நிலைப்பாட்டினையும் அவற்றிற்குண்டானகரு-உரு உறுப்புகளின் நிலைப்பாட்டையும் நமக்கு உணர்த்தும்.

எப்போதும் நமது வலது கைஆட்காட்டி விரலின் நுனி பகுதியைக் கொண்டே நாடி பரிசோதித்தல் வேண்டும்.

2

இடது கையில்

கீழ்பிரதேசம் – நீர்பூதம் (சிறுநீர்பை, சிறுநீரகம்)

மத்திய பிரதேசம் – ஆகாய பூதம் (பித்தப்பை, கல்லீரல்)

மேல் (உத்தம) பிரதேசம் – நெருப்பு (சிறுகுடல், இருதயம்)

வலது கையில்

கீழ்பிரதேசம் – நெருப்பு (மூலவெப்பமண்டலம், இருதய உரை)

மத்திய பிரதேசம் – பூமி (வயிறு, மண்ணீரல்)

மேல் (உத்தம) பிரதேசம் – காற்று (பெருங்குடல், நுரையீரல்)

கரு மற்றும் உரு ஆகிய இரண்டு தன்மைகளைநாடியின் இரண்டு வகைப்பாடுகளின் மூலம் அறியலாம்.

ஒரு பிரதேசத்தினை தம்முடைய ஆட்காட்டி விரலின் நுனியில் தொட்டவுடன் தெரியும் துடிப்பு மேலோட்டமான நாடி எனவும், அதேபிரதேசத்தினை சற்றேஆட்காட்டி விரல் நுனியால் அழுத்தியவுடன் தெரிகின்ற துடிப்பு ஆழமானநாடி எனவும் அறியப்படும். இதில் மேலோட்டமானநாடி உரு உறுப்பின் நிலையையும் ஆழமானநாடி கரு உறுப்பின் நிலையையும் நமக்கு உணர்த்தும்.

நாடி பரிசோதனையில் நான்காம் நிலை உணர்வறிதல்

நாடி நமது ஆட்காட்டி விரல் நுனியில் ஏற்படுத்துகின்றஉணர்வினை நாம் நன்கு உணர்தல் வேண்டும். இந்தஉணர்வினை மனதினால் அளக்கும் மருத்துவரேநல்லநாடி பரிசோதகராய்விளங்க முடியும். முதலில் ஒருவருக்கு ஒரு கையில் உள்ளமூன்று பிரதேசங்களும் ஏற்படுத்தக்கூடிய உணர்வினை மேலலோட்டமானநாடியிலும், ஆழமானநாடியிலும் தனித்தனியேநன்கு உணர்ந்து மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். இதன்பின்னர் மேலோட்டமானமூன்று நாடிகளையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்து அம்மூன்றும் சமஅளவில் உள்ளதா என்பதைஆராய வேண்டும்.

அடுத்தபடியாகஆழமானமூன்று நாடிகளையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்த்து மூன்றும் சமமாகஉள்ளதா என்பதைஆராய வேண்டும். மூன்றும் சமமாகஇருப்பது அந்தபூதங்களும் அது சார்ந்தஉறுப்புகளும் ஆரோக்கியத்துடன் விளங்குவதைகுறிக்கும். ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்றின் உணர்வு உயர்ந்தோஅல்லது தாழ்ந்தோவிளங்கினால் அந்தபூதமும் அது சார்ந்தஉறுப்பும் பாதிப்பில் உள்ளதைகுறிக்கும். உணர்வு உயர்ந்திருந்தால் உடலில் அந்தபூதம் மற்றும் அதன் ஆற்றல் உடலில் உயர்ந்துள்ளதைஅறியவும். உணர்வு குறைவாகஇருந்தால் அந்தபூதமும் அதன் ஆற்றலும் உடலில் குறைந்துள்ளதைஅறியவும்.

 

இவ்வாறாகநமது கையிலுள்ளநாடியினை பரிசோதித்து அறிய வேண்டும். பரிசோதனையில் உடலின் பஞ்சபூதங்களின் உணர்வுகளைநன்கு ஆராய்ந்து மனதால் சீர்தூக்கிப் பார்த்து அவற்றின் பஞ்சதன்மையைக் குறித்து ஒரு தீர்க்கமானமுடிவுக்கு வருதல் வேண்டும்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்