விஜய் சேதுபதியை கைது செய்யவேண்டும் கொந்தளிக்கும் திருநங்கைகள்!

0
Full Page
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் திருநங்கை ரேவதி கூறுகையில், “விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்துபவர்களா? அதை நீங்கள் பார்த்தீர்களா. திருமணமானவர் திருநங்கையாக மாறியதாகக் காட்டியிருக்கிறீர்கள்.  ஒரு குழந்தை பெற்ற பின்பு அவர் திருநங்கையாக மாறியிருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருப்பதும், மனைவியிடமே புடவை வாங்கி உடுத்துவதும், என்ன அடிப்படையில் கதை எழுதினீர்கள்”  நான் 13 வயதில் பெண்மையை உணர்ந்து பல இடங்களில் அடிபட்டேன் என கூறினார் .
Half page
கல்கி சுப்ரமணியம் கூறும்போது, சூப்பர் டீலக்ஸ் படம்  திருநங்கைகள் சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. முழுக்க முழுக்க முட்டாள்தனமாகவும்  தவறாகவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் சிலர்  “இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும்” என்றனர்.

-webdunia

Quarter page

Leave A Reply

Your email address will not be published.