திருச்சி மத்திய பேருந்து நிலையம் சைக்கிள் ஸ்டாண்டிற்கு புதிய ஒப்பந்தகாரர் !

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சைக்கிள் ஸ்டாண்டிற்கு புதிய ஒப்பந்தகாரர் !
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடுவார்கள். அதுபோல இந்த ஆண்டிற்கு ஏலத்தைத் துவக்கினார் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.


தற்போது இந்த மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்டை இதுநாள் வரை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓப்பந்தகாரர் முருகன் என்பவர் நடத்தி வந்தார் . அவரின் ஒப்பந்த காலம் முடிய அவரே மீண்டும் 53 லட்சம் ஏலத்திற்கு அனுமதி கேட்டு டிடியும் கமிஷனர் ரவிச்சந்திரன் பெயரில் எடுத்துள்ளார்.
அதே நேரத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் தொலைக்காட்சி போடுவதற்கான உரிமையை வாங்கியுள்ள ராஜேஷ் கண்ணா என்பவர் 54 லட்சத்திற்கு ஏலம் அதிக பணம் கட்டி இந்த முறை சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துள்ளார். ஆனால் இந்த ஒப்பந்ததில் ராஜேஷ் கண்ணாவிற்கு ஆதரவாக திருச்சி அமைச்சர் ஒருவர் முழு முயற்சி செய்து எடுத்துக்கொடுத்தார் என்றும். அவர் டிடியா எடுத்துக்கொடுக்காமல் வெறும் பிளாங் செக் கொடுத்தார்கள் என்று சர்ச்சை கிளம்பியது.
ஆனால் மாநகராட்சி தரப்பிலே அது மாதிரி எதுவும் இல்லை அதிக விலை நிர்ணயம் செய்து ராஜேஸ்கண்ணா கொடுத்தால் அவருக்கு கிடைத்துள்ளது. அதே போல திண்டுக்கல் முருகன் மத்திய பேருந்து நிலையம் கழிப்பிட டெண்டரை எடுத்துள்ளார். இன்று 31.03.2019 இரவு இரண்டு ஒப்பந்தக்காரர்கள் இரண்டு பேரும் அவர் அவர் இடத்தை மாற்றி ஒப்படைப்பார்கள் என்கிறார்கள். நாளை முதல் புதிய ஒப்பந்தக்காரர்கள் மூலம் செயல்படும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
