
கடை பூட்டு உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு.

திருச்சி பெரியகடைவீதியை சேர்ந்தவர் ரங்கநாதன்(56). ஜாபர்ஸா தெருவில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு நேற்று காலை கடையை திறந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ரங்கநாதன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். .
