திருச்சி ஸ்பெஷல் – “பார்த்தசாரதி விலாஸ்” நெய் தோசை

0
Business trichy

ஒரு புறத்தில் காவிரி ஆற்றினையும் மறு புறத்தில் கொள்ளிடத்தினையும் கொண்டுள்ள திருவானைக்காவில் எத்தனையோ  சிறப்புகள் இருந்தாலும்… அந்த பகுதியில் இருக்கும் “பார்த்தசாரதி விலாஸ்” நெய் தோசை அதையெல்லாம் விட சிறப்பு வாய்ந்தது தான்…! என்ற என்னுடைய நண்பனின் வார்த்தைகள் காதில் விழ…  அப்படியெனில் நாம் ருசிக்காமலா? என்ற ஆதங்கத்தில் அந்த கடையை தேடி சென்றேன்.

திருவானைக்காவில் கோபுரத்தில் இருந்து வலதுபுறம் இருக்கும் மேல விபூதி பிரகாரத்திற்குள் நுழைந்தால் தெரிகின்றது  “பார்த்தசாரதி விலாஸ்”.  அந்த கட்டிடத்தினை பார்க்கும் போதே   நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கையை கண்ணில் காணலாம்…! மேலும் இங்குள்ள மரத்தூண்கள் மற்றும் படங்கள் நமக்குள் ஒரு வித மலர்ச்சியை தருகின்றது. கடைக்குள் நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஐயப்பனை மக்கள் வணங்கவே விபூதி, குங்குமம் வைத்துள்ளனர். ஐயப்பனை பார்த்துக்கொண்டே நிற்கும் போது, நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு சூப்பர்… மூணு சூப்பர் என்று சத்தம் வரவே, அப்படினா என்ன என்று நாம் ஆவலுடன் கேட்க… அங்கிருந்தவர்கள் விளக்கினார்கள்.. அங்கு நெய் தோசையை தான் “சூப்பர்” என்றே அழைக்கின்றனர் என்று.. இதற்கு பெயர்காரணம் –  நெய் தோசை சூப்பர் என்று மக்கள் சொல்லி சென்று கொண்டிருக்க… சூப்பர்.. சூப்பர் … அப்படியே மக்கள் சொல்ல தொடங்கிய பெயரே அந்த சூப்பர்…

இந்த சூப்பர் தோசையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம்…. அந்த ரகசியத்தினையும் அவர்களின் சமையல் அறைக்கே சென்று தெரிந்துகொண்டோம். சற்று விலாசமானதாக இருந்தாலும் அந்த கால பழமைகள் மட்டும் மாறாமல் இருந்தது சமையலறை..! உள்ளே நுழையும் போதே அனல் என்னை தீண்டியது..

loan point

இந்த தோசையின் ரகசியம் இதுவே…“நான்கு பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உருட்டு உளுந்து இந்தக் கலவைதான்”. கையில் அள்ளினால் வழியாத பதத்தில் மாவை அள்ளி விட்டு,  அதே பதத்தில் தோசைகல்லில்  வார்க்கிறார்கள்… ஆறு இழுப்பு. தோசையில் வட்டவட்டமாக  ரேகை தெரிகின்றது. வேக்காடு தெரியும் நேரத்தில் நெய்யை பக்குவமாக இடுகின்றனர். பின்னர் அதனை குழல் போல சுற்றி “சூப்பர்” என்ற சத்தத்தோடு… நெய்யின் மனத்தோடு தேங்காய் சட்டினி, கார சட்டினி, மற்றும் சாம்பாருடன்   வாடிக்கையாளரை நெருங்குகிறது. “தரமான வெண்ணையாக வாங்கிப் பொங்கும் பதத்தில் உருக்கப்பட்ட நெய் மாறாத பக்குவமே  நிறத்தோடு மணத்தினையும் சேர்த்து தோசையாகிறது”  என்றே கூறுகிறார் தோசை வார்ப்பாளார்.

 

nammalvar
web designer

இந்த தோசையில் தோன்றும் பொன்னிறத்திற்கு முதல் காரணம்… விறகினால் ஆனா அடுப்பு. மேலும் அந்த தோசைக்கல்லின் மொத்தத்தன்மை தான்.  இந்த தோசைகல்லிற்கு வயது 70…! ஆம் இந்த கடை ஆரம்பமானது 1943-இல் தாத்தா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கடை வழிவழியாக வந்து  தற்போது 3-வது தலைமுறையாக ஏ.வைத்தியநாதன் அவர்கள் இந்த உணவகத்திற்கு உரிமையாளராக உள்ளார்.

 

வைத்திய நாதன் அவர்கள் கூறும் போது,”குறைந்த உணவு பொருட்கள் என்றாலும் தரமானதாக இருந்தாலே போதும்  மக்கள் உங்களை நாடி வருவார்கள் என்கின்றார்..! முகநூலில் (Facebook) பார்த்தேன், கூகுளில் பார்த்தேன் என்று கூறி உணவருந்தும் போது மனநிறைவாக உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்”. மேலும்  உழைப்பு, அனுபவமான மாஸ்டர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அகிலாண்டீஸ்வரியின் அருளே தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்கின்றார்.

 

பேசிக்கொண்டிருக்கும் போதே.. எங்கள் இலையிலும் வைத்த அந்த சூப்பரை சாப்பிட்டுவிட்டு கையிலே நின்று விட்ட நெய்யின் மனதினை நுகர்ந்தபடி வந்து சேர்ந்தோம்..!

-இந்துமதி போஸ்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.