மணப்பாறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு.

0
gif 1

மணப்பாறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு.

.

மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியில் களத்து வீட்டில் வசித்து வருபவர் நல்லுசாமி(வயது 46). இவர் கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

gif 3
gif 4

இவர் தினமும் காலையில் கடைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் நல்லுசாமி கடைக்கு சென்றார்..

மதியம் நல்லுசாமியின் மனைவி வீட்டை பூட்டிவிட்டு தோகைமலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை அக்கம், பக்கத்தினர் பார்த்தனர்.

இது குறித்து அவர்கள் நல்லுசாமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் சுமார் ரூ.2 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.