திருச்சி ஸ்பெஷல் – அத்தோ

0

இட்லி  தோசை என என்னதான் நம்முடைய உணவு வகைகள் இருந்தாலும்… மற்ற மாநில உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கிவிட்டோம்.
அதிலும் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பிரபலமாகி  வரும்  பர்மா உணவு வகைகளான அத்தோ, மொய்ஞா, தவுசா மற்றும் பேஜோ போன்ற வாயிலே நுழையாத பெயர்கள் என்றாலும் வாங்கி விரும்பி உண்ணுகின்றனர் நம் மக்கள்..!

திருச்சி சின்னக்கடைவீதி மற்றும் தெப்பக்குளம் போன்ற   பகுதிகளில் தான் இந்த வகை பர்மா உணவுகள் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த உணவுகளுக்காக இந்த பகுதிக்கு வந்து செல்வோர்களும் உள்ளனர்.
கடந்த 35 வருடகாலமாக  அத்தோ மற்றும் பேஜோ தொழில் செய்து வருகின்றனர்  உசைன் மற்றும் அபூபக்கர். உசைன் அவர்கள் பர்மாவில் தன்னுடைய பெரியம்மாவிடம் இந்த ரெசிபியை கற்றுக்கொண்டதாகவும்…
பின்னர் திருச்சிக்கு வந்த பின்பு 1979-இல் தொடங்கிய இந்த கடை இன்று பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ளார்.

‌சந்தா 1

தொடக்கத்தில் தள்ளுவண்டியில் தான் தொடங்கியது பின்னர் பெண்கள் குடும்பத்தினருடன்  பெருமளவில் வரத்தொடங்கியதும் அதன் அருகிலேயே கடை ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆரம்பத்தில் பர்மாவில் இருந்த திரும்பிய மக்களும் பின்னர் இதன் சுவை அறிந்தவர்கள் மட்டுமே வந்து செல்ல ஒவ்வொருவராக சுவைக்க தொடங்கினர். இதன் சுவை பிடித்து போக தன் நண்பர்கள் உறவினர் என தொடங்கியது தான் இந்த கூட்டம்.

சந்தா 2

இங்கு  அத்தோ, மொய்ஞா, தவுசா, பேஜோ, முட்டைமசால், இன்னும் சில சைவ அசைவ வகை உணவுகளும் கிடைக்கின்றன. அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். அதனுடன், பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி, புளி சாறு, எலுமிச்சை, இடித்த  மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறினால், மொய்ஞா தயார்,  அதனுடன் முட்டைகோஸ் மற்றும் கரம் மசாலா சேர்த்து தந்தால் அத்தோ. இதில் சேர்க்கப்படும்  பேஜோ தான் அதில் சிறப்புவாய்ந்தது.

அரிசிமாவு கடலைமாவு சேர்த்து தட்டையாக பொரித்தெடுக்கப் படுகின்றது இது  அத்தோவில் சேர்க்கப்படுகின்றது. அவித்த முட்டைக்குள்
பொரித்தவெங்காயம், பூண்டு, உப்பு,    மிளகாய்த்தூள்,புளிச்சாறு, சேர்த்து தருவது. மக்கள் பலரும் இந்த வகை உணவுகளை விரும்பி உண்ணுகின்றனர். ஒரு நாளைக்கு  குறைந்தது  ஆயிரம் பேராவது வந்து செல்வதாக கூறுகின்றார் உசைன். இந்த உணவுகளில் பெரும்பாலும் பச்சை காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்கு எந்த கெடுதலும் வருவதில்லை என்று கூறி முடித்தார்.

-இந்துமதி போஸ்

Leave A Reply

Your email address will not be published.