திருச்சி தேசிய கல்லூரி நூலகத்துறை சார்பில் புத்தக கண்காட்சி

0
Business trichy

திருச்சி தேசிய கல்லூரி நூலகத்துறை சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா மார்ச்-27-ல் தொடங்கியது.

கல்லூரி செயலாளர் ரகுநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் சுந்தரராமன்  புத்தக விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னாள் நூலகர் ராகவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

MDMK

கண்காட்சியில் மொழி, இலக்கியம், வரலாறு, வணிகம் , அறிவியல் , பொது அறிவு உள்ளிட்ட அனைத்து வகை நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டது. அனைத்து வகை நூல்களுக்கும் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Kavi furniture

புத்தக கண்காட்சி மார்ச் 28-ம் தேதி மாலை 6.30 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கல்லூரி நூலகர் சுரேஷ்குமார் மற்றும் அனைத்து நூலக அலுவலர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.