ஷ்ரைன் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஷ்ரைன் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மேல்பாலர் வகுப்பு பட்டமளிப்பு விழா 29.03.2019 வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த விழாவானது பள்ளி நிர்வாகி அருட்சகோதரி மெர்சி DMI தலைமையில் நடைபெற்றது. திருமதி ஆனி ரிச்சர்டு முன்னாள் முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு அலுவலர், மலேசியன் ஏர்லைன்ஸ், திருச்சி ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ம. பெ. ஜான்சன் மாணவர்களுக்கு பட்டமேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் அனைத்தையும் கீழ் பாலர் வகுப்பு மற்றும் முதலாம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியர் துணையோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் அனைத்து பெற்றோர்களும் பங்கேற்று மாணவர்களை பாராட்டி வாழ்த்திச்சென்றனர்.
