மோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது-சுப்பிரமணியன் சுவாமி

0
Business trichy

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர்பெற்றவர் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி பொருளாதாரத்துக்கான முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். அங்குள்ள மாணவர்களுக்குப் பொருளாதாரம் பற்றி பாடமும் எடுத்துள்ளார். ஏற்கெனவே சில முறை நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரத்தைப் பற்றி தெரியாது என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

web designer

கொல்கத்தாவில் நேற்று (மார்ச் 23) ‘என்கேஜிங் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சீனா’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்று பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்குப் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாததால் அப்படி கூறியிருக்கலாம். நிதியமைச்சருக்கும் (அருண் ஜேட்லி) பொருளாதாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது.

அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் முறைகளின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கிட்டால் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.