நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்; பிரியங்கா

0

பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிக்கான பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

கங்கை நதியில் தனது மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். நேற்றைய முதல் நாள் பயணத்தில் சிர்ஸா பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “பல ஆண்டுகளாக நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்போதும் நான் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கலாம். நான் ஏன் வெளியே வந்தேன்? நாடு மிக அபாயகரமான சூழலில் இருக்கிறது. அதனால்தான் நான் வந்தேன்.

food

உங்கள் ஓட்டுதான் உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இதை நீங்கள் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனது சகோதரர் ராகுல் காந்தி சொல்லின் செல்வன் ஆவார். அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராடும் எனது சகோதரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். வீட்டில் அமர்ந்துகொண்டிருக்காமல் நான் இப்போது உங்களுடன் வந்துவிட்டேன். இதுதான் அனைவரும் விழித்துக்கொள்ளும் நேரம்.

 

நீங்கள் அனைவரும் எங்கள்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறீர்கள். அது எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. உங்களது உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.
நாட்டு மக்கள், குறிப்பாக விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் கடுமையான துன்பத்தில் இருப்பதாகவும், அவர்களது துயர்கள் துடைக்கப்படும் எனவும் பிரியங்கா உறுதியளித்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.