நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது போலீசார் விசாரணை

0
1

நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது போலீசார் விசாரணை

 

 

 

 

 

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருபவர் சுந்தரி(வயது 34). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் சுந்தரிக்கும், பெரியகடைவீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரனுக்கும்(41) இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களாக சுந்தரியின் நடத்தையில் குணசேகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரனை விட்டு பிரிந்து சுந்தரி தனியாக வசித்து வந்தார். இதனால் அவரை தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி குணசேகரன் வலியுறுத்தி வந்தார்.

2

இந்நிலையில் நேற்று காலை சுந்தரி வழக்கம்போல் ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு குணசேகரன் வந்தார். அவரை கண்ட சுந்தரி இங்கு ஏன் வந்தீர்கள்? என்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், தான் கொண்டு வந்த கத்தியால் சுந்தரியின் கழுத்து, முதுகு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த குணசேகரன் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் குணசேகரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

3

Leave A Reply

Your email address will not be published.