தொகுதிகள் ஒரு பார்வை-திருச்சி

தமிழகத்தின் மையப்பகுதியும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் விருப்ப தொகுதியாகவும் உள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி, காவிரி ஆற்றின் தொன்மையைக்கொண்ட இந்த நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். எனவே, இத்தொகுதியை விட்டுக்கொடுக்க பெரும்பாலும் எந்த கட்சிகளும் விரும்புவதில்லை. அதற்கு உதாரணமாமே, தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை மாற்ற எம்.ஜி.ஆர் முயற்சி செய்தது, திமுக தேர்தலில் போட்டியிட திருப்புமுனை மாநாடு அமைக்கப்பட்டது உள்ளிட்டவை.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சி1, திருச்சி2, திருவெறும்பூர் ஆகியவை இருந்தன. பின்னர், திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை(தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை இணைந்தது. தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ரங்கம், திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, என ஆறு சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியுள்ளது
கடந்த இரண்டு முறை அதிமுக பக்கம் இருந்த திருச்சி தொகுதி உட்கட்சி பூசலின் காரணமாக இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு சென்று விட்டது. அக்கட்சியின் சார்பாக தர்மபுரியை சேர்ந்த இளங்கோவன் போட்டியிடுகிறார். அதோபோல் ஆரம்பம் முதலே திமுக கூட்டணி சார்பில் திருச்சி கேட்கப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிகே திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்பார்ப்புக்கு பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடஉள்ளதாக, காங்கிரஸ்கட்சி சார்பில் பட்டியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அமமுக கட்சியின் சார்பில் முன்னாள் மேயர் சாருபாலா போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை திருச்சி தொகுதியில் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் எண்ணிக்கை
ஸ்ரீரங்கம் 2,91,711
திருச்சி (மேற்கு) 2,57,089
திருச்சி (கிழக்கு) 2,44,662
திருவெறும்பூர் 2,79,937
கந்தர்வகோட்டை 1,89,106
புதுக்கோட்டை 2,26,762.மொத்தம்-14,89,267
1951 – மதுரம் – சுயேச்சை : இவர் திருச்சி பிரபலமான மருத்துவர். குடும்பம் தற்போதும் திருச்சியில் புத்தூர் பகுதியில் குருமெடிக்கல் என்று வைத்திருக்கிறார்கள்.
1957 – எம். கே. எம். அப்துல் சலாம் – இந்திய தேசிய காங்கிரஸ் : திருச்சி பாலக்கரையை சேர்ந்த இவர், புனிதவளனார் கல்லூரியில் படித்தவர். திருச்சி நகராட்சியின் உறுப்பினராக இருந்து பாரளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1962, 1967 – கே. ஆனந்த நம்பியார்- சி.பி.ஐ : 1946 ஆம் ஆண்டில், நம்பியார் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1951 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையிலிருந்து வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மற்றும் 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தன்னுடைய இறுதி காலத்தை திருச்சியே கழித்தார்.
1971 – 1977 மீ. கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ : கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 – ஜூலை 27, 1988) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரை, 1977 முதல் 1980 வரை, 1980 முதல் 1986 வரையான இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர்களுக்கும் லோக் சபாவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1980 – என். செல்வராஜ் – தி.மு.க : திருச்சி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராக இருந்தவர். செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். இவர் ஒருவர் மட்டுமே திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திமுக கட்சிகாரர் என்பது குறிப்பிடதக்கது.
1984 – 1996 – அடைக்கலராஜ் – இந்திய தேசிய காங்கிரஸ்(1996 – ஆம் ஆண்டு த.மா.கா) : திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
1998, 1999 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் – பிஜேபி : ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பின்னர், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து வெற்றிபெற்று அமைச்சராகப் பதவி வகித்தார்.
காங்கிரஸ் சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராகவும், பாஜக சார்பில் 1998-2000 வரை திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜீலை 1991- டிசம்பர் 1993 வரை நரசிம்ம ராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராகவும் வாஜ்பாய் அரசில் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். திருச்சியில் எம்.பி.யாக இருந்தபோதே இவர் உடல்நலக் குறைவினால் இறந்து போனார்.
2001 – தலித் எழில்மலை அதிமுக: தலித் எழில்மலை இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். 1998-ல் இரண்டாம் வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் சிதம்பரம் தொகுதியிலிருந்து 12-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுகவின், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 – எல். கணேசன்- ம.தி.மு.க. : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 ஜூன் 30 ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10 ஆம் நாள் வரை பணியாற்றினார்.
1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர். 1971-ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993-ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2009 – 2014 ப. குமார் – அதிமுக : திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான இவர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டைத் தாலுக்காவில் உள்ள புனல்குளம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
