மண்ணின் மகள் ராணி சாருபாலா தொண்டைமான் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

மண்ணின் மகள் ராணி சாருபாலா தொண்டைமான் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?
நாமறிந்த முதல் தொண்டைமான்
திருப்பதி மலையை ஒட்டிய

தொண்டைமான் கோட்டையை
தலைநகராகக் கொண்டு ஆண்ட
புல்லி அல்லது,
காஞ்சியை தலைநகராக்கி ஆண்ட
பெரும்பாணாற்றுப்படைத் தலைவன்
இளந்திரையன்!
நாமறியும் கடைசித் தொண்டைமான்
புதுக்கோட்டையின் கடைசி மன்னர்
ராஜகோபாலத் தொண்டைமான்!
ரகுநாதராயத் தொண்டைமான் தான்
புதுக்கோட்டையின்
முதல் தொண்டைமான் மன்னன்!
1686 லிருந்து 1730 வரை
44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் அவர்!
அவருக்குப் பிறகு
2 விஜய ரகுநாதன், 3 ராயரகுநாதன்
4 விஜயரகுநாதன் 5 விஜயரகுநாதன்
6 ரகுநாதன் 7 இராமச் சந்திரன்
8 மார்த்தாண்ட பைரவன்
9 இராஜகோபாலன் என
ஒன்பது தொண்டைமான்கள்
272 ஆண்டுகள்

புதுக்கோட்டையை ஆட்சி புரிந்தனர்!
இந்திய விடுதலைக்கு முன்பு
கல்வியிலும் மருத்துவத்திலும்
கலைகளிலும் சிறந்து விளங்கியது
தொண்டையர் அரசு!
விடுதலை இந்தியாவோடு
முதலில் இணைந்தது
புதுக்கோட்டை சமஸ்தானமே!
நாணயம் அச்சடித்த குறுநில மன்னர்
இவர்களாகவே இருக்க வேண்டும்.
புதுக்கோட்டை அம்மன் சல்லி
புகழ்பெற்ற நாணயம்!
இரகுநாதராயா தொண்டைமான், விஜய ரகுநாத ராயா தொண்டைமான், ராயா ரகுநாத தொண்டைமான், விஜய இரகுநாத தொண்டைமான் , விஜய ரகநாத ராயா தொண்டைமான், இரகுநாத தொண்டைமான், ராமச்சந்திர தொண்டைமான், மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் வழியில் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் 1928 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
அப்போது அவருக்கு வயது ஆறு ஆகும். ராஜகோபால தொண்டைமான் 1922 ஆம் ஆண்டு ராஜ்குமார் ராஜேந்திர தொண்டைமானுக்கும் ஜானகி ஆயி அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். தனது 22 வயதில் ஆட்சி உரிமை பெற்றார்.
1934 இல் சர் அலெக்சாண்டர் டாட்டன்காம் சமஸ்தான ஆட்சியாளராக பதவியேற்றார். அவரின் சீர்திருத்தங்கள் மிகவும் புகழ்பெற்றவை வருவாய் துறை, நீர்ப்பாசனம்,நிதி, கூட்டுறவு ஆகிய பல துறைகளிலும் சிறந்த சீர்த்திருத்தங்களை செய்து புதுக்கோட்டையை நவீன சமஸ்தானம் ஆவதற்கு வேண்டிய பல அடிப்படை காரியங்களை செய்தார்.
மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் ஆட்சியில் 1929ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக மானா மதுரைக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இதே ஆண்டில் புதிய அரண்மனை கட்டப்பட்டு 1930 ஆம் ஆண்டு மன்னர் குடியேறினார். 1948 இல் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது 26 வயது நிரம்பிய இளம் மன்னர் தன்னுடைய அரசை இந்திய அரசுடன் இணைத்தார்.
அன்று கஜானாவில் இருந்த மொத்த பணத்தையும் சுமார் 45 லட்சம் மற்றும் அரசாங்க சொத்து முழுவதையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தார் .சுதேச மன்னர்கள் பெரும்பாலானோர் தத்தம் சமஸ்தானங்களை இந்திய யூனியனில் இணைக்க வழக்கிட்டு ஒத்து வராமல் இருந்த நிலையில் ராஜா ராஜகோபால தொண்டைமான் முன்வந்தார். முடி துறந்த மன்னரான ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சியில் தமது அரண்மனையில் வாழ்ந்து மறைந்தார்.
இவர் புகைப்படத்துறையிலும் ஓவியக்கலை போன்ற கலைகளிலும் வல்லவர். 1974 இல் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுகை அரண்மனையை மக்கள் நலனுக்காக மிகக் குறைந்த தொகைக்கு அளித்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்று ராஜகோபால தொண்டைமான் ராஜ்குமார் ராதாகிருஷ்ண தொண்டைமானுக்கும் ராணி ரமா தேவிக்கும் பிறந்த மூத்த மகன் ஆவார். மறைந்த கடைசி மன்னரான ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் அவர்களால் பத்தாவது மன்னராக ஸ்வீகாரம் செய்யப்பட்டவர்.
ராஜகோபால தொண்டைமான் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் ஆவார் .ஸ்கீட் என்னும் பிரிவில் தேசிய அளவில் பல பதக்கங்களையும் பெற்றிருக்கிறார் . சிறந்த புகைப்படக் கலைஞர் பழமை மற்றும் புதுமையான புகைப்பட கருவிகளால் அரிய புகைப்படங்கள் எடுத்தவர் .
தற்போது புதுக்கோட்டை கீரனூர் அருகில் உள்ள ஆவாரங்குடிபட்டியில் சர்வதேச தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் களத்தை நிறுவி அதில் டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரது மனைவி சாருபாலா தொண்டைமான் மறைந்த பாஸ்கர தொண்டைமானின் பெயர்த்தி. தந்தையார் சுப்பிரமணியன் நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றியவர்.
தாயார் சரோஜினி சுப்பிரமணியன் சென்னையில் மங்கையர்க்கரசி மகளிர் மன்றத்தில் பெண்களுக்கான பல சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டவர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயராக 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒன்பது வருடங்கள் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் உள்ள மன்னர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளராக இருக்கின்றார். 11வது வாரிசாக பிரித்திவிராஜ் தொண்டைமான் உள்ளார். இவர்களது புதல்வி ராதாநிரஞ்சனி ஆவார்.
.
தொகுப்பு – வெற்றிசெல்வன்
