பிரேமலதா சந்தேகத்தை தீர்த்த எடப்பாடி பழனிசாமி

0
1

பிரேமலதாவுக்கு கள்ளக்குறிச்சியில் வேறு ஒரு சந்தேகம். கள்ளக்குறிச்சியில் பிரேமலதாவின் தம்பி சுதீஷ்தான் தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி களமிறங்கியிருக்கிறார்.

4

தொகுதியில் அதிமுகவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது என்று சுதீஷிடம் பிரேமலதா ஆலோசித்தபோது, ’அதிமுகவின் மாவட்டச் செயலாளரான குமரகுரு நெடுங்காலமாகவே பொன்முடிக்கு வேண்டியவர்., அவர் நமக்கு வேலை செய்யாம கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதிரி தோணுது’ என்று பிரேமலதாவிடம் சொல்லியிருக்கிறார் சுதீஷ்.

2

உடனடியாக இதுபற்றி முதல்வர் எடப்பாடியிடம் பேசினாராம் பிரேமலதா. விஷயத்தைக் கேட்டுக்கொண்ட எடப்பாடி, ‘குமரகுரு பத்தி நீங்க கவலையே பட வேணாம். அவர் உங்களுக்காக முழுசா உழைப்பார்’ என்று உத்தரவாதம் கொடுத்தாராம்”

3

Leave A Reply

Your email address will not be published.