எங்களின் நிலைமை தான் என்ன….? கண்ணீர் விட்டு அழும் வி.எல்.இ -க்கள்.

0

எங்களின்  நிலைமைதான் என்ன….? கண்ணீர் விட்டு அழும் வி.எல் .இ -க்கள்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் டிஜிட்டல் சேவா மூலம் பொதுச்சேவை மையங்கள் இயங்கிவருகிறது. இதனை நடத்துபவர்கள் கிராமப்புற தொழில் முனைவோர் என்பவர்களாவார்கள். இந்த பொது சேவை மையங்களின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறது. 

 

குறிப்பாக ஆதார் சேவைகள், கிராமப்புற மக்களுக்கு இலவச கணினி பயிற்சி, மின்னணு முறையில் வாகன சுங்கவரி கட்டணம் செலுத்துதல் போன்ற அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர். இவ்வாறு சேவை செய்து வருபவர்களுக்கு மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் பல்வேறுகட்ட மனஉளைச்சல் ஏற்படுவதால் சிலர் கடன் பெற்று தொடங்கிய தொழிலையே பாதியில் விட்டுவிட்டு வெளியேறி வருகின்றனர்.

 

இதனைக்குறித்து கிராமப்புற தொழில் முனைவோர் சங்க(VMK)  மாநில ஒருங்கிணைப்பாளர். பெரம்பலூர் சந்திரமௌலியிடம் கேட்டபோது,” அவர் கூறுகையில்,  தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000 தொழில்முனைவோர் இருக்கின்றோம். அதில் அமைப்பு ரீதியாக பார்க்கும்போது 1800 தொழில்முனைவோர்கள் உள்ளோம். எங்களுடைய வாழ்வாதாரம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் மூலம் இயங்கி வரும் அரசு சேவைகளை மக்களுக்கு பெற்றுத்தருவது, ஆனால் சமீபத்தில் UIDAI -CSC மூலமாக வழங்கிவந்த ஆதார் சேவையை நிறுத்திவிட்டது. 

 

இதற்காக அனைத்து VLE-களும் முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர். மேலும் இதற்காக சுமார் 80000 லிருந்து 1,00,000 வரை கடன்வாங்கி முதலீடு செய்தோம். இப்பொழுது ஆதார் சேவைகள் நிறுத்தப்பட்டதால் செய்த முதலீட்டிற்கு வட்டி கூட கட்ட முடியாமல் தடுமாறி வருகின்றோம் . மேலும் எங்களுக்கென்று மத்திய அரசோ/ மாநில அரசோ எந்தவித சலுகைகளும் வழங்கவில்லை .மேலும் மற்ற மாநில அரசுகளின் சேவைகள் ஏன் அருகில் உள்ள பாண்டிச்சேரி அரசின் சேவைகள் முதற்கொண்டு  இந்த CSC – போர்ட்டலில் வழங்கியுள்ளது. 

 

ஆனால் தமிழக அரசின் சேவைகள் மட்டும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை, நாங்கள் அந்த தமிழ்நாடு மாநில சேவைகளுக்காக அரசு கேபிள் நிறுவனத்திற்கு காப்பீட்டு தொகையாக ரூ.10000 செலுத்தி ஓராண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் எங்களுக்கு அந்த சேவைகள் வழங்கப்படவில்லை.

இதற்காக நாங்கள் அவர்கள் கூறிய அடிப்படை வசதிகளை எங்கள் மையத்தில் ஏற்படுத்துவதற்காக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை கடன்வாங்கி முதலீடு செய்துள்ளோம்.

 

food

  இதுவரையில் அதற்கும் எங்களால் வட்டிக்கட்ட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எங்களுடைய காப்பீட்டு தொகையும் திரும்ப வரவில்லை. எங்களில் பலர் நாற்பது வயதை கடந்தவர்களாக இருப்பதால், அரசின் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு பிற அரசுப்பணிகளில் செல்ல தகுதியற்றவர்களாக இருக்கிறோம்.  ஆதலால் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நிரந்தர வருமானமும் இல்லாமல் வாழ்ந்துவரும் எங்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுடன் இணைத்து அவர்களுக்கு வழங்கியுள்ள உரிய பணி பாதுகாப்பினை வழங்கிடுமாறு கோருகிறோம் என்றார்…..  

 

இதுப்போன்று அரசு இவர்களிடம் தேவையான உழைப்பினை சுரண்டிகொண்டு வாழ்வாதாரத்திற்கு கூட வழியில்லாத நிலையை ஏற்படுத்தியிருப்பது சரியா?… 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டு திட்டமும் CSC மூலம் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுப்போன்று மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இவர்களுக்கு தமிழ்நாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளருக்கான அலுவலகம் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. 

 

மேலும் இது தொடர்பான தகவல்களை பெற தமிழ்நாடு CSC ஒருங்கிணைப்பாளர் வினோத் கொரியகோஸ் தொலைப்பேசி வாயிலாக அழைத்தபோது தான் வாகனம் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும்  மெசேஜ்ஜில் பேசுமாறு கூறினார். மேலும் அவரிடம் மாநில அலுவலகம் எங்குள்ளது என்று கேட்டபோது அவர் டெல்லி என்று பதிலளித்தார். மேலும் அவர் நம்மிடம்  நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்றபோது திருச்சி என்று கூறினோம், மேலும் அவர் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் என்று ஒரு நம்பரை கொடுத்து அவரை தொடர்புகொள்ளுமாறு மெசேஜ் மூலம் கூறினார். 

 

பின்னர் அந்த நம்பரை தொடர்புக்கொண்டு கேள்வியை எழுப்ப தொடங்கினோம்,  சார், PACL நிறுவனத்துக்கான பணம் பெரும் முறைகள் CSC க்கள் செய்து வருகின்றனராமே என்றபோது, அவர் அது CSC க்கும் அதற்கும் தொடர்பில்லை சார், அதனை VLE -க்கள் தன்னிச்சையாக செல்படுத்துவதாகவும், அதற்கும் CSC க்கும் தொடர்பில்லை என்பதுபோல் கூறினார்.

 

சார், தமிழ் நாட்டிற்கான சேவைகளை எதுவும் அளிக்காததுபோல் தெரிகிறதே, என்றபோது அவர், அப்படியெல்லாம் இல்லைசார் யார் சொன்னா உங்களுக்கு , ஒரு சில குறிப்பிட்ட சேவைகள் மட்டும் மாநில சேவை மையத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது, வேறு எந்த மாநிலத்தில் இதுபோன்று அனைத்து மாநில சேவைகளும் கொடுத்துள்ளனர் என்று நம்மிடம் பதில் கேள்வி எழுப்பினார். சார் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் அம்மாநிலத்திற்கான அனைத்து சேவைகளும் வழங்கி வழங்கிவருகின்றனராம் சார் என்று கூறினோம், அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லை சார், அப்படியெல்லாம் இருக்காது என்றார், மேலும் அவர் இது பழைய செய்தி நீங்கள் இப்போது எடுத்துப்பார்த்து கொண்டிருகிறீர்கள் என்று  நம்மிடம் பதில் கூறினார், அதற்கு நாம் சார் பழைய செய்தியாக இருந்தாலும், புதிய செய்தியாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் சார் என்று கூறினோம்…..,, 

இதுபோன்ற சூழ்நிலையில் கண்ணீர் விட்டு அழும் வி.எல்.இ -க்களுக்கு என்ன பண்ண போகிறது இந்த ……அரசு

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.