30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தே தொழில் செய்தோம் – மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குறித்து பாரிவேந்தர்

0
Business trichy

திருச்சியில் மறைந்த முன்னாள்
அமைச்சர் என்.செல்வராஜ் உடலுக்கு பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ்,
1980 முதல் 84 -ம் ஆண்டு வரை எம்பியாகவும்
திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்தவர். 2006ம் ஆண்டு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் திமுக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு  அ.தி.மு.க.வில் இணைந்த அவர்,   கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.
அவரது உடல் அஞ்சலிக்காக திருச்சி சாஸ்திரி சாலையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து, பொதுச் செயலர் பி.ஜெயசீலன், அமைப்புச் செயலர் எஸ்.எஸ்.வெங்கடேசன், பார்க்கவ குல முன்னேற்றச் சங்கம் தலைவர் சத்தியநாதன், திருச்சி வடக்கு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.இளங்கோவன்
உள்ளிட்ட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

loan point

*வேந்தர் பேட்டி*

nammalvar
web designer

நீண்ட நாளைய நண்பர்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்து தொழில் செய்தோம்.
யாரிடமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். முன்னாள் அமைச்சர் அனைவரிடமும் சொந்த குடும்பம் போல பரிவுடன் பழகுவார்.
கட்சிக்காக இரவும் பகலும் பாடுபட்டவர்.
அருமையான நண்பரை நான் இழந்திருக்கிறேன்.
நல்ல கட்சி தலைவரை தமிழகம் இழந்துள்ளது.

குடும்பத்தினர் சொல்லெண்ணாத் துயரத்துல் உள்ளனர். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

அவர் என்றும் தமிழக மக்கள் மனதில் நிறைந்திருப்பார்.

சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவார்.
குடும்பத்தினருக்கு அவரது இழப்பை சரிகட்ட யாராலும் முடியாது.
குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை இயற்கை அளிக்க வேண்டும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.