மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.

0
Business trichy

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.

பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலதாமதமாகவும் உரிய ஆவணங்கள் இன்றியும் வந்ததாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

MDMK

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் M.N.செந்தில்குமார், பிற்பகல் 3 மணிக்கு பிறகு மனுத்தாக்கல் செய்ய வந்தார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான போதிய ஆவணங்களை அவர் கொண்டுவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Kavi furniture

இதனால் அவரது வேட்புமனுவை ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அக்கட்சியினர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.