பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி.

0
Full Page

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி.

திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகமும், அதன் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக முனைவர் ஆய்வுப்படிப்புகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. முனைவர் பட்ட ஆய்வில் முதன்முதலில் சேரும்போது, முழுநேரம் மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு சென்ற கல்வியாண்டு முறையே கலைப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரமும் அரசு கல்லூரிகளில் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Half page

ஆனால் இந்த ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரமும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.21 ஆயிரமும் பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்படுகிறது.

ஆய்வு மையங்களை கல்லூரிகளில் துறைரீதியாக தொடங்குவதற்கு பதிவுக்கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி இருப்பதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி கனவு கலைக்கப்பட்டுள்ளது. ஆய்வேடு சமர்ப்பித்தல், மீண்டும் ஆய்வு மறுபதிவு செய்தல், காலநீட்டிப்பு போன்ற அனைத்து செயல்களிலும் கடுமையான கட்டண உயர்வை பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே துணைவேந்தர் இதில் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் நலன்கருதி ஏழை மாணவர்களுக்கும் எளியமுறையில் உயர்கல்வி அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.