செய்தி விளம்பர பேக்கேஜா ? செய்தி நிறுவனங்களை தெறிக்க விட்ட வேட்பாளர் ?

0

செய்தி விளம்பர பேக்கேஜா ? செய்தி நிறுவனங்களை தெறிக்க விட்ட வேட்பாளர் ?

தமிழகத்தில் எம்.பி. தேர்தல் மற்றும் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனே வேட்பாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கட்சிகளின் செலவுகள் தேர்தல் கமிஷனின் கண்காணிப்பில் வந்து விடும்.

குறிப்பாக பிரச்சாரம் என்கிற அடிப்படையில் பொதுக்கூட்டம், திருமண மண்டபங்களில் நடத்தப்படும் கூட்டங்கள், வாகனங்கள் என அனைத்தும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் வேட்பாளர்கள் நான்  வெற்றி பெற்றால் என மேற்கொள்ளப்படும்  திட்டங்கள் குறித்து பத்திரிக்கைகளில்  விளம்பரம் செய்வதும், தனக்கு இந்த சின்னத்தில்  வாக்களியுங்கள் என விளம்பரங்கள் செய்வதும் கூட தற்போது தேர்தல் செலவு என்பதால் தவிர்க்க வேண்டிய கட்டாயமாகி விட்டது.

food

இதனை கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள்  விளம்பரங்களுக்கு பதிலாக வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் குறித்த படங்கள் மற்றும் செய்திகளுக்கான பணம் பெறும் முறையை கொண்டு வந்து விட்டன.

எம். செல்வராஜ் – வேட்பாளர்

இதற்கு பேக்கேஜ் என்று பெயர் வைக்கப்பட்டு 20 நாட்கள் 25 நாட்கள் சம்மந்தப்பட்ட வேட்பாளரின் பிரச்சாரம் குறித்த படம் செய்தி (கலர் அல்லது பிளாக் அண்டு ஒயிட் என தனித்தனி) வெளியிட 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பெறப்படுகிறது.

இந்த பேக்கேஜ் முறைக்கு கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களும் ஓகே சொல்வது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.  இதற்காக ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலிருந்து நிர்வாகமே நேரடியாக செய்தியாளர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வேட்பாளர்களிடம் ஒப்பந்தம் போட்ட பின்பு தான் செய்தியே வெளியாகும்.

அந்த வகையில் நாகை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் செல்வராஜீடம் சார் பேக்கேஜ் போட்டுக்கிறோம் என பத்திரிக்கை நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்த, செய்திக்கு, விளம்பரத்திற்கு 3 லட்சமா ? அட போங்க சார்.. 3 லட்சம் இருந்தா  நான் 6  நாள் பிரச்சாரத்தை முடிச்சுடுவேன்னு செல்வராஜ் கேஷூவலாக சொல்ல பேயறைந்ததை போன்று நின்றார்களாம் அந்த பத்திரிகையிலிருந்து வந்தவர்கள்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.