முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மறைந்தார்.

0
Full Page

 

 

முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மறைந்தார்.

திருச்சியின் ஆக்டிவ் அமைச்சர் என்று கூறப்படுபவர், இன்ஜினியரான இவர் 1987 முதல் 1993வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். இவர் 1980–84 ஆண்டுகளில் திருச்சி தொகுதி திமுக எம்பியாக இருந்தார். மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சிக்கு சென்ற திமுக மாவட்ட செயலாளர்களில் செல்வராஜீம் ஒருவர். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர் 2006 ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.

Half page

இவருடைய பலமே அவருடைய நியாபக சக்தி தான் செல்நம்பரை ஒருமுறை சொன்னால் போதும் அப்படியே மனதில் பதிந்து வைத்துக்கொள்ளுவார். இப்படி அவர் மனப்படமாக 2500க்கு மேற்பட்ட தனக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களை நினைவில் வைத்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மேடைகளில் பேசும்போது குறிப்புகள் எதுவும் இல்லாமல் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர். மேடையில் இருப்போரின் பெயர்களையும், கூட்டத்திற்கு வந்திருக்கும் முக்கியமானவர்களின் பெயர்களையும் நினைவில் வைத்து பேசக்கூடியவர்.

இந்நிலையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செல்வராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த செல்வராஜ், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஜெ. மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவால் அவருடைய மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவருடைய மகன் இரண்டு பேரும் திமுக. மா.செ. நேருவுடன் இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தனர். இந்த எம்.பி. தேர்தலுக்கு கே.என்.நேரு ஆசியுடன் பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தனர் என்பது குறிப்பிட தக்கது.

கடந்த வாரம் திருச்சி வந்த திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் செல்வராஜ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று மாலை 6.15 மணிக்கு செல்வராஜ் இயற்கை எய்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.