தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை திருச்சியில் ரஜினியின் அண்ணன்!

0
Business trichy

தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை திருச்சியில் ரஜினியின் அண்ணன்

 

புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் உள்ளார். இந்தநிலையில் புஷ்பராஜ் குமாரமங்கலத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோரான ரானோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார்.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணராவ் கலந்து கொண்டு பெற்றோரின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மேலும் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

loan point

 

nammalvar
web designer

முன்னதாக சத்தியநாராயணராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

எங்களது பெற்றோர் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். அவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். தற்போது அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிய புஷ்பராஜை சேர்த்து 5 மகன்கள். எங்களது பெற்றோர் பிழைப்புக்காக பெங்களூர் சென்றனர். பின்னர் வேலூர், தஞ்சை, திருச்சியில் வாழ்ந்து வந்தனர். இதன் நினைவாகத்தான் புஷ்பராஜ் மணிமண்டபம் கட்டி உள்ளார். ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

 

விரைவில் அவர் அதனை செய்வார். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் அவரது ஆதரவு இல்லை. நல்லவர்கள் யார்? என புரிந்து தீர்மானித்து ஓட்டு போடுங்கள். பணத்தாசை காட்டுபவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என அவர் கூறி உள்ளார். இந்த மணிமண்டபத்தை பார்க்க 15 நாட்களில் ரஜினிகாந்த் குமாரமங்கலம் வருவார்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

அப்போது ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.